•இது சுமந்திரனுக்கு "கேவலம் " இல்லையா?
நேற்றைய தினம் லண்டனில் நடைபெற இருந்த சுமந்திரனின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நடக்கும் முக்கிய கூட்டத்தில் சுமந்திரன் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(கூட்டம் ரத்துச் செய்வதாக அறிவித்து ஒட்டப்பட்ட நோட்டீஸ் கீழே தரப்பட்டுள்ளது)
ஆனால் நாம் அறிந்தவரையில் திட்டமிட்டபடி சுமந்திரன் 18ம் திகதி லண்டன் வந்துவிட்டார்.
18ம் திகதி முதல் 20ம் திகதி காலை வரை அவர் லண்டனில்தான் இருந்துள்ளார். 20ம் திகதி காலையில்தான் அவர் கனடா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
19ம் திகதி முழுநேரமும் அவர் லண்டனில் இருந்ததுடன் கூட்டத்தை நடத்தாமல் ரத்துச் செய்துள்ளார்.
கூட்டம் நடத்துவதும் நடத்தாமல் விடுவதும் அவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது.
ஆனால் கூட்டம் நடத்தாமைக்கு பாராளுமன்ற கூட்டம் காரணம் என்று ஏன் மக்களுக்கு பொய் சொல்ல வேண்டும்?
லண்டனில் இருந்துகொண்டு கொழும்பில் நிற்பதாக பொய் சொல்வது ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு பெரிய கேவலம்?
கூட்டம் நடைபெற்றால் சுமந்திரனுக்கு நிச்சயம் செருப்படி விழப்போகிறது என்ற தகவல் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு கிடைத்துள்ளது.
இந்த நேரத்தில் தனக்கு செருப்படி விழுந்தால் அது தேர்தலில் எதிரொலித்துவிடும் என்ற அச்சத்தினால் சுமந்திரன் கூட்டத்தை ரத்துச் செய்துள்ளார்.
சுமந்திரன் தன் வாழ்நாளில் பயம் காரணமாக கூட்டத்தை ரத்துச்செய்வது மட்டுமன்றி அதற்காக பொய் கூறவேண்டியேற்பட்டதும் இதுவே முதல் முறை.
இந்த கேவலம் ஏன் தனக்கு ஏற்பட்டது என்பதை சுமந்திரன் கொஞ்சமாவது சிந்திப்பாரா?
இனியாவது மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிப்பாரா?
No comments:
Post a Comment