Friday, January 19, 2018

அண்மையில் சம்பந்தர் அய்யா உடல் நலம் இன்மையால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.

அண்மையில் சம்பந்தர் அய்யா உடல் நலம் இன்மையால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
ஜனாதிபதி, பிரதமர் எல்லோரும் தொலைபேசியில் நலம் விசாரித்தனர். ஆனால் மகிந்த ராஜபக்ச மட்டும் மகனுடன் சென்று நேரில் பார்வையிட்டார்.
நோய் தொற்று ஏற்படும் என டாக்டர்கள் அனுமதியளிக்க மறுத்தபோதும் மகிந்த ராஜபக்ச எதற்காக மகனுடன் நேரில் சென்று பார்வையிட்டார்?
மகிந்தராஜபக்சவின் ஆட்சியை மாற்றியது தாங்களே என்று சுமந்திரன் கூறுகிறார். ஆனால் மகிந்த ராஜபக்ச நேரில் சென்று சம்பந்தர் அய்யாவை பார்வையிடுகிறார்.
மகிந்தராஜபக்ச சம்பந்தரிடம் பேசிய அந்த விடயம் என்னவாக இருக்கும் என பலரும் ஆராய்கிறார்கள். ஒருவேளை இப்படியிருக்குமோ?
மகிந்த ராஜபக்ச- "சம்பந்தரே!
என் கண்ணை (மகன் நாமல் ராஜபக்சவை)
உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
இனி அதில் ஆனந்த கண்ணீரை மட்டுமே
நான் காண வேண்டும்.
என்னைக் காப்பாற்றியதுபோல்
என் மகனையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.
என்னை “தேசியதலைவர்” என்றீர்கள்
என்னால்தான் திருமலைக்கு சுதந்திரமாக சென்றுவர முடிகிறது என்றீர்கள்.
அதேபோல் நானும் உங்களுக்கு பதவி, பாதுகாப்பு, பணம்
கிடைத்தபோது எதிர்க்கவில்லை.
இப்படியே இனியும் ஒருவருக்கொருவர்
உதவியாக இருப்போம்".
சம்பந்தர் அய்யா- "நிச்சயமாக சேர்.
உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன் சேர்.
இந்த கட்டை உயிரோடு இருப்பதே
தமிழினத்திற்கு துரோகம் செய்யவும்
உங்களுக்கு சேவை செய்யவும்தானே சேர்."

No comments:

Post a Comment