•நடிகை சன்னி லியோனுக்கும் பத்தாயிரம் ரூபாய்
எம்.பி சுமந்திரனுக்கும் பத்தாயிரம் ரூபாய்
எம்.பி சுமந்திரனுக்கும் பத்தாயிரம் ரூபாய்
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எதிர்வரும் 19ம் திகதி லண்டன் வருகிறாராம்.
அவருடைய கூட்டத்திற்கு நுழைவுக்கட்டணம் 50 பவுண்டு அதாவது பத்தாயிரும் ரூபாய் என்று அறிய வருகிறது.
ஒருசில மாதங்களுக்கு முன்னர் நடிகை சன்னி லியோன் லண்டன் வந்திருந்தார். அவருக்கும் நுழைவுக்கட்டணம் பத்தாயிரம் ரூபாய் அறவிடப்பட்டது.
ஒரு நடிகையைப் போல் தன்னைக் காண வரும் மக்களிடம் டிக்கட் பொட்டு பணம் அறவிடும் ஜனநாயகத் தலைவர் என்ற பெருமையை சுமந்திரன் பெறுகிறார்.
தமிழ் மக்களிடம் வாக்கு பெற்று பதவியை அடைந்ததும் தமிழ் மக்களால் தனக்கு அபத்து என்று கூறி சிங்கள அதிரடிப்படை பாதுகாப்பு பெற்ற பெருமையும் அவருக்கு உண்டு.
நடந்தது இனப்படுகொலை என்று சிங்கள புத்திஜீவிகளே சொல்லும் வேளையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறிய தமிழ் தலைவரும் அவரே.
தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் பெற்றுக்கொடுக்காமல் தனக்கு ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெற்று மகிழ்பவரும் அவர்தான்.
தொடர்ந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதோடு அந்த தமிழ் மக்களிடம் தன்னைப் பார்ப்பதற்கு பத்தாயிரம் ரூபா தைரியமாக அறவிடுபவரும் சுமந்திரன் அன்றி வேறுயாரால் முடியும்?
குறிப்பு-
சுமந்திரனின் சேவையைப் பாராட்டி அவருக்கு லண்டன் தமிழ் மக்கள் சார்பாக ஏன் செருப்பு மாலை அணிவிக்கக்கூடாது?
குஜராத்தில் பாஜக வேட்பாளருக்கு மக்கள் செருப்புமாலை அணிவித்த காட்சியை இந்த லிங்கில் காணலாம்.
No comments:
Post a Comment