Tuesday, April 30, 2024
தோழர் தமிழரசன் !
• தோழர் தமிழரசன் !
(14.04.2024 யன்று தோழர் தமிழரசனின் 79வது பிறந்த தினம்
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் என்றார் மாமேதை காரல் மாக்ஸ்
அதேபோன்று,
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர்
ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன்
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு “மா, மா” என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
தமிழக தமிழர் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன்
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார்.
தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment