Tuesday, April 30, 2024
தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீரப்போவதில்லை
தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீரப்போவதில்லை
இந்த வரி கோத்தா போய் ரணில் ஜனாதிபதியாக வந்தபோது ஜேவிபி கூறியது.
இதே வரியை இப்போது ஜேவிபியின் அநுராவிற்கு தமிழ் மக்கள் கூறினால் அதற்கு அவர்கள் பதில் என்ன?
மகிந்தா கோத்தா மற்றும் ரணில் போன்று இல்லாமல் தான் வித்தியாசமான ஆட்சியை தருவேன் என ஜேவிபி கூறுகின்றது.
தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமல் வித்தியாசமான ஒரு ஆட்சியை ஜேவிபி எப்படி கொடுக்கப் போகின்றது?
தமிழ் மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் ஜேவிபி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பே அந்த சுயநிர்ணய உரிமையை பாவித்து பிரிந்து செல்ல வேண்டாம் சேர்ந்து செயற்படுவோம் என ஜக்கியத்திற்காக தமிழ் மக்களிடம் கேட்க முடியும்.
ஆனால் தமிழ் மக்களுக்கு சமவுரிமை உண்டு என்று கூறும் ஜேவிபி இதுவரை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவில்லை.
ஜேவிபி அமைப்பானது தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து வந்த ஒரு அமைப்பு.
தோழர் சண் அவர்கள் ஜேவிபி அமைப்பை ஒரு இனவாதக்கட்சி என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஜேவிபியினரிடம் வினவியபோது தாம் ஒரு தமிழரின் நிழலுக்காவது தீங்கிழைத்ததாக காட்ட முடியுமா என கேட்கின்றனர்.
தமிழ் மக்களின் ஆதரவையும் ஜக்கியத்தையும் ஜேவிபி உண்மையில் விரும்புகின்றது எனில் இந்த பதில் போதுமானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்தவிட்டு சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்பதையும் ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment