Tuesday, April 30, 2024
சில கேள்விகளும் பதில்களும்
• சில கேள்விகளும் பதில்களும்
(1)இந்துக் கடவுள் இல்லை என்று கூறும் நடுநிலை நக்கிகள் இயேசு இல்லை, அல்லா இல்லை என்று கூறுவார்களா?
நாம், இந்துக் கடவுள் இல்லை. அல்லா இயேசு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையே. மாறாக எந்தக் கடவுளும் இல்லை என்றுதானே கூறுகின்றோம்.
(2) எப்போதும் இந்து மதத்தையே கண்டிக்கிறீர்கள். அதுபோல் ஏன் கிருத்தவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ கண்டிப்பதில்லை?
முதலாவது, இந்து மதத்தை கண்டிப்பதற்கு மற்ற மதங்களை எல்லாம் கண்டித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
இரண்டாவது, நாம் எம்முடைய நோய்க்குத்தான் மருந்து சாப்பிட வேண்டுமேயொழிய மற்றவர்களின் நோய்க்கு நாம் சாப்பிட முடியாது.
நான் உட்பட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவேதான் அதற்கு எதிராக அதிக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
(3) இந்து சமயத்திற்கு மாற்றாக சைவ சமயத்தை தமிழர்கள் உயர்த்திப் பிடிக்கலாம்தானே?
மாற்றுக் கருத்து என்பது ஒரு கருத்துக்கு பதிலாக இன்னொரு கருத்தைக் கூறுவது அல்ல.
மாறாக இருக்கும் தவறான கருத்துக்கு மாற்றாக சரியான கருத்தை முன்வைப்பது. இதன் மூலமே சமூகம் முன்னோக்கி இயங்க வைக்க முடியும்.
எனவே இந்து சமயம் என்னும் தவறான கருத்துக்கு சைவசமயம் உரிய சரியான மாற்று இல்லை.
கடவள் இருக்கிறார் என்பதற்கு இன்னொரு கடவுள் இருக்கிறார் என்பது மாற்று கருத்து இல்லை. மாறாக கடவுள் இல்லை என்பதே சரியான மாற்று ஆகும்.
ஆதலால், முருகன் எமது பாட்டன் என்றோ அல்லது சிவன் எமது முப்பாட்டன் என்றோ உயர்த்திப்பிடிப்பது தமிழ்தேசிய விடுதலைக்கு உதவப் போவதில்லை. மாறாக இந்திய அரசுக்கே அவை மறைமுகமாக உதவப் போகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment