Sunday, May 15, 2016

•நாம் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.

•நாம் சாகடிக்கப்படலாம். ஆனால்
ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.
நாம்,
உரிமையை இழந்தோம்
உடமையை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்- ஆனால்
உணர்வை இழக்கவில்லை.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது
தமிழன் மட்டும் அடிமையாக கிடந்திட முடியுமா?
என்ன காரணத்திற்காக போராடினோமோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது. நடந்தே தீரும்.
1971ல் அடக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் 1989ல் போராடியது.
60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டபோதும் ஜே.வி.பி மீண்டும் எழுந்தது.
சிங்கள மக்களால் மீண்டும் எழு முடியுமானால் தமிழ் மக்களால் என் ஏழ முடியாது?
60 அயிரம் சிங்கள மக்களை கொன்ற இலங்கை ராணவம்தான் முள்ளிவாயக்காலில் 40 ஆயிரம் தமிழ் மக்களை கொன்றது.
கதிர்காமத்தில் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இலங்கை ராணுவம்தான் முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாக்களை கொன்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை அடக்கிய இலங்கை பொலிஸ்தான் கொழும்பில் மாணவர் போராட்டத்தை அடக்கியது.
யாழ்ப்பாணத்தில் மக்களைச் சுட்ட அதே படையினர்தான் நீர்கொழும்பில் குடிநீருக்காக போராடிய சிங்கள மக்களை கொன்று அடக்கினர்.
சம்பூரை இந்தியாவுக்கு கொடுத்த அதே இலங்கை அரசுதான் அம்பலாங்கொடையையும் இந்தியாவுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளது.
மன்னார் எண்ணெய்வளத்தை இந்தியாவுக்கு கொடுத்த அதே இலங்கை அரசுதான் பொல்லநறுவையில் நிலத்தையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளது.
தமிழர் வளங்களை இந்தியாவுக்க கொடுத்த இலங்கை அரசுதான் சிங்கள மக்களின் வளங்களையும் இந்தியாவுக்கு கொடுத்துள்ளது.
இலங்கை அரசும, அதனைக் காக்கும்; ராணுவமும் தமிழ் சிங்கள மக்கள் அனைவருக்கும் எதிரி என்ற உண்மை அனைத்து மக்களாலும் உணரப்படுமாயின் அடுத்த வினாடியே இலங்கை அரசு தூக்கியெறியப்படும்.
இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கிறது என்ற உண்மை எப்போது இலங்கை மக்கள் அனைவராலும் உணரப்புடுகிறதோ அன்று இந்தியா விரட்டியடிக்கப்படும்.
வரலாறு அறிந்த காலம் முதல் இலங்கை மக்கள்
மன்னர்களின் ஆக்கிரமிப்பை முறியடித்தார்கள்.
போத்துக்கேயரை விரட்டியடித்தார்கள்.
ஒல்லாந்தரை விரட்டியடித்தார்கள்.
ஆங்கிலேயர்களைக்கூட விரட்டினார்கள்.
இன்றுவரை இலங்கையை இந்தியாவுடன் இணைக்கவிடாமல் தடுத்து வருகிறார்கள்.
இலங்கை மக்கள் பெருமை மிக்க வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள்.
அவர்கள் இனி அடிமையாக இருந்தவிடுவார்களா என்ன?
இறுதி வெற்றி உறுதி அவர்களுக்க!

No comments:

Post a Comment