•"லிபரா" முதலாளியும் "சோபானி" முதலாளியும்
"லிபரா" முதலாளி நடிகர் சங்கத்திற்கு 1 கோடி ருபா கொடுத்தமையை விமர்சித்து ஒரு பதிவு செய்திருந்தேன். அதனை தவறு என்றும் லிபரா வின் சாதனைகள் என்று அறிக்கை ஒன்றையும் ஒருவர் எனக்கு அனுப்பியுள்ளார். அவருக்குரிய பதிலாக இப் பதிவை இடுகிறேன்.
"சோபானி" என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு தயிர் கம்பனி. அதன் முதலாளி துருக்கியில் இருந்து அகதியாக சென்றவர்.
அவர் அமெரிக்காவில் "சோபானி" என்ற தயிர் கம்பனியை ஆரம்பித்து இன்று பெரிய முதலாளியாக வளர்ந்துள்ளார்.
அவர் தனது கம்பனியில் பணிபுரியும் 2000 முழு நேர ஊழியர்களுக்கு தனது கம்பனியின் பங்குகளை கொடுத்து அவர்களையும் மில்லியனர்களாக்கியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி எந்த விளம்பரமும் இன்றி சிரிய அகதிகளுக்கும் அவர் பாரியளவில் உதவி வருகிறார்.
அதேவேளை லிபரா முதலாளியும் இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்தான். அவருடைய வளர்ச்சிக்கு அவரது கம்பனியில் பணிபுரியும் ஊழியர்களே பெரிதும் காரணம்.
ஆனால் லிபரா முதலாளி கடந்த டிசெம்பர் மாதத்தில் பலரை பணி நீக்கம் செய்துள்ளார். அண்மையில் ஏப்ரல் மாதத்தில்கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.
சினிமா நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபா கொடுத்த இந்த லிபரா முதலாளி தன் கம்பனிக்கு உழைத்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மட்டுமன்றி அவர்களுக்கு போதிய இழப்பீட்டு தொகையும் கொடுக்கவில்லை.
தான் சிறந்த சாதனையாளர் என்று பணம் கொடுத்து விளம்பரம் செய்யும் லிபரா முதலாளி தனது கம்பனியில் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறார்.
சோபானி முதலாளி தனது ஊழியர்களுக்கு பங்குகளை கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துகிறார். பிரித்தானியாவின் சாதனையாளர் என்று தன்னை விளம்பரப்படுத்தும் லிபரா முதலாளி பல வருடங்களாக பணி புரிந்த ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்தி துன்பத்தைக் கொடுக்கிறார்.
சோபானி முதலாளி சிரிய அகதிகளுக்க உதவி வருகிறார். லிபரா முதலாளி தமிழகத்தில் இருக்கும் அகதிகளுக்கு உதவாமல் நடிகர்களுக்கு உதவுகிறார். நஎகர்களுக்கு உதவுவதை படம் போட்டு விளம்பரம் செய்கிறார்.
மழையிலும் குளிரிலும் கஸ்டப்பட்டு காட் விற்று கொடுப்பவர்களின் உபரி உழைப்பை சுரண்டியே லிபரா முதலாளி லாபம் காண்கிறார். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதோ அடிப்படை சம்பளமான வெறும் ஆறரைப் பவுண்ட் மட்டுமே.
No comments:
Post a Comment