•மக்கள் என்றும் மகத்தானவர்களே!
ஒரு மனிதனுக்கு ஆபத்து என்றால் இன்னொரு மனிதன் உதவும் மனித்தன்மை அழிந்துவிட வில்லை என்பதை இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்கள்.
வரலாறு காணாத மழை. வெள்ளம். மண்சரிவு. 80க்கு மேற்பட்டோர் இறந்துவிட்டனர் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை.
அரசு வழக்கம்போல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் மக்கள் போராட்டம் வெடிக்காதவகையில் பார்க்கிறேர்களேயொழிய உரிய நிவாரணம் வழங்கவில்லை.
மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் அரசு மக்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டு உதவியை எதிர்பார்க்கிறது.
அனால் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். தங்கள் உணவை பாதிக்கப்ட்டவர்களுக்க வழங்குகிறார்கள்.
சென்னை வெள்ளத்தில் எப்படி மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவினார்களோ அதேபோன்று இலங்கையிலும் மூவின மக்களும் ஒருவருக்கொருவர் உதவி வருகின்றனர்.
சென்னை வெள்ளதின்போது மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களில் எப்படி ஜெயா அம்மையார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதோ அதேபோன்று இலங்கையிலும் அமைச்சர் ஒருவர் வாழைப்பழத்தில் ஸடிக்கர் ஒட்டியுள்ளார்.
போர்க்கப்பலில் உதவி அனுப்பிய இந்தியாவும்கூட போட்டோ பிடித்து விளம்பரம் செய்வதிலேயே அதிகம் அக்கறை செலுத்துகிறது.
கொழும்பில் எந்த பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்தோh அதே பள்ளிவாசல்களில்தான் உணவுகள் சேகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது.
மலையகத்தில் எந்த தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதோ அதே மலையக தமிழ் மக்களுக்கு முதன்முதலாக சிங்கள மக்களே உணவு வழங்கியுள்ளனர்.
சுனாமி காலத்pலும்கூட கிழக்கு மாகாணதில் உள்ள தமிழ் மக்களுக்கு எல்லைக் கிராமங்களில் இருந்த சிங்கள மக்களே முதன் முதலாக உணவு கொண்டு வந்து வழங்கியிருந்தார்கள்.
இயல்பாகவே மக்கள் ஒருபோதும் இனம் மதம் மொழி பார்ப்பதில்லை. சுயநல அரசியல்வாதிகளே இன மத குரோதங்களை மக்கள் மனங்களில் வளர்க்கிறார்கள்.
சென்னை மழையின் போது முகநூல் மூலம் எப்படி நன்கு சேவை செய்யப்பட்டதோ அதேபோன்று இன்றைய இலங்கை மழையிலும் முகநூல் பல பயன்களை செய்கிறது.
அமைச்சர் மனோ கணேசனின் முகமூடியை பதிவாளர் Nila Loganathanகிழித்து தொங்கவிட்டிருக்கிறார். கீழே உள்ள இணைப்பில் விபரம் பாhக்கலாம்.
https://www.facebook.com/nilashayene/posts/1186409874703138
https://www.facebook.com/nilashayene/posts/1186409874703138
No comments:
Post a Comment