•புலம்பெயர் தமிழர்களிடத்தில் பரவி வரும் பிறந்தநாள் விழா வைரஸ் நோய்க்கு மருந்து என்ன?
பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எப்போது யாரால் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை.
அது எப்படி எமது தமிழ் இனத்தின் மத்தியில் ஊடுருவியது என்றும் எனக்கு புரியவில்லை.
ஆனால் அது ஒரு கொடிய வைரஸ் நோயாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரவி வருகிறது என்பது உண்மை.
முதலில் சிறு குழந்தைகளை சந்தோசப்படுத்த என்று ஆரம்பித்தார்கள்.
அப்பறம் தமது 50 வயது பூர்த்தியைக் கொண்டாடுவதாக கூறினார்கள்.
இப்போது அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறார்கள்.
இங்கு எனது வருத்தம் என்னவெனில்,
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் கொண்டாடியபோது அதனை கிண்டல் செய்தவர்கள்
பின்பு பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடியபோது அதனை விமர்சனம் செய்த மாற்று கருத்தாளர்கள்,
இன்று தங்களுக்கு தாங்களே எந்த சுயவிமர்சனமும் இன்றி பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்கள்.
இங்கு எனது கேள்வி என்னவெனில்,
தமிழர்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் அவசியமா?
அவசியமாயின் அதனை எப்படி கொண்டாடுவது?
அவசியம் இல்லையெனில் அதனை எப்படி நிறுத்துவது?
எனக்கு யார்மீதும் தனிப்பட்ட வருத்தம் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் நான் பெரிதும் மதிப்பவர்களே இதனை கொண்டாட ஆரம்பித்தமையினால் இது குறித்து பேச முனைந்துள்ளேன்.
நேற்று மாற்றுக் கருத்தாளர் ராஜாவுக்கு சிலர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள்.
இனி அடுத்து அதில் கலந்துகொண்ட ஒரு மூத்த இடதுசாரி தோழருக்கு கொண்டாட உள்ளார்கள்.
இது பக்கத்து இலைக்கு சொதி விடுங்கோ என்ற கதையை உங்களுக்கு நினைவு படுத்தினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
ஆனால் இவர்கள் எல்லாம் வெறும் மாக்சியவாதிகள் மட்டுமல்ல
தமிழ்சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள்
தமிழ்சமூக மாற்றத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்கள்
எனவே அவர்கள் செய்யும் காரியத்தில் ஒரு அர்த்தம் இருக்கும் என நம்புகிறேன்.
நாட்டில் மக்கள் வறுமையில் வாடும்போது இவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் எனில் நிச்சயம் அதற்கு ஒரு சிறந்த காரணம் இருக்கும் என நம்பகிறேன்.
எனவே மக்கள் நலன் குறித்த அந்த ரகசியத்தை எனக்கும் கூறும்படி அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment