•சோனியா காந்திக்கு எதிரான தமிழ் உணர்வாளர்களின் போராட்டம்
தமிழ்நாட்டுக்கு வருகை தந்த சோனியா காந்திக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த உணர்வாளர்களின் போராட்டம் நியாயமானது. பாராட்டுக்குரியது. குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு ஆறதல் அளிக்கக்கூடியது.
சோனியாகாந்தி ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் எனக்கூறி அவருடைய கட்சியுடன் உறவை முறித்துக்கொண்டவர் கலைஞர் கருணாநிதி.
சோனியாகாந்தி தனது தவறுகளுக்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இனியும் இவ்வாறு நடக்காது என உறுதியளிக்கவும் இல்லை.
இந்நிலையில் மீண்டும் சோனியாவுடன் கலைஞர் கருணாநிதி கூட்டு வைத்துள்ளார் எனில் என்ன அர்த்தம்?
அவருக்கு ஈழத் தமிழின அழிப்பு குறித்து அக்கறை இல்லையா? அல்லது தமிழின அழிப்பில் அவருக்கும் பங்கு இருக்கிறதா?
முள்ளிவாய்க்கால் அழிவில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு என்றும் எனவே இந்திய அரசும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வெளிநாட்டில் உள்ள முக்கிய அறிஞர் குழு கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சோனியாவுடன் கலைஞர் கூட்டுச் சேர்ந்திருப்பதும் அவ்வாறான விசாரணைகள் நடைபெறுவதை தடுக்கும் என்பதோடு அவர்கள் தொடர்ந்தும் தவறு செய்ய ஊக்கம் கொடுப்பதாக அமைந்துவிடும்.
எனவே இதற்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் கறுப்புகொடி போராட்டம் நடத்தியது உண்மையில் பாராட்டுக்குரியது ஆகும்.
இவர்களுடைய உணர்வையே தமிழக மக்கள் அனைவரும் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்படுத்துவிதமாக தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும்.
ஆம். இந்த தேர்தலில் தி.மு.க காங்கிரஸ் கூட்டு தோற்கடிக்கப்பட்டேயாக வேண்டும். தமிழ் இனத்தை அழித்தவர்களை தமிழ் இனம் ஒருபோதும் மன்னிக்காது, மறக்காது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும்.
இந்த தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட காங்கிரஸ் திமுக கூட்டு தோற்க வேண்டும் என்பதே முக்கியமாகும்.
No comments:
Post a Comment