•சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜெயா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்ற நிலையில் செல்வம் அடைக்கலநாதன் மட்டும் எதற்காக அவசரமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்?
அதுவும் சம்பிரதாயத்திற்கான வாழ்த்தாக இருந்தாலும் பரவாயில்லை. வலிந்து எதற்காக புகழ்ந்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும்?
ஜெயா அம்மையாரின் ஆட்சியில் ஜனநாயத்தினை நிலை நிறுத்தியுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
ஜெயா அம்மையாரின் ஜனநாயத்தை பாடகர் கோவனிடம் கேட்டால் தெரியும்.
அல்லது மதுக்கடைகளை மூடக்கோரி அடிவாங்கிய பெண்களிடம் கேட்டால் தெரியும்
.
அல்லது மாணவர்களிடம் கேட்டால் தெரியும்.
.
அல்லது மாணவர்களிடம் கேட்டால் தெரியும்.
இவர்களிடம் கேட்க விரும்பாவிடில் தமிழகத்தில் உள்ள அகதிகளிடம் கேட்டால் ஜெயா அம்மையாரின் ஜனநாயகத்தை நன்கு தெரிந்தகொள்ள முடியும்.
ஜெயா அம்மையாரின் ஆட்சியில்தான் மதுரையில் ஒரு அகதி வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் மின்சாரக்கம்பியில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
ஜெயா அம்மையாரின் அட்சியில்தான் கும்மிடிப்பூண்டி அகதிமுகாமில் ஒரு அகதியின் காலை பொலிசார் அடித்து முறித்துள்ளனர்.
ஜெயா அம்மையாரின் ஆட்சியில்தான் மண்டபத்தில் ஒரு அகதிப்பெண் நான்கு பொலிசாரால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டுள்ளார்.
இவையெல்லாம் ஜெயா அம்மையார் சிறந்த ஜனநாயகத்தை நிலை நிறுத்தியதாக எப்படி செல்வம் அடைகலநாதன் அவர்களுக்கு தெரிகிறது?
இந்த சம்பவங்கள் நடந்தபோது எல்லாம் மௌனமாக இருந்த செல்வம் அடைக்கலநாதன் இப்ப எதற்காக ஜெயா அம்மையாருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்?
சிறப்புமகாம் என்னும் சித்திரவதை முகாமில் பல வருடங்களாக அப்பாவி அகதிகள் பலர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஜெயா அம்மையாருக்க வாழ்த்து தெரிவித்த செல்வம் அவர்களால் இந்த அகதிகளை விடுதலை செய்யும்படி ஏன் கேட்க முடியவில்லை?
இத்தனைக்கும் செல்வம் அவர்களும் ஒரு காலத்தில் புதுக்கோட்டை சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர். அவரும் சிறப்பு முகாம் கொடுமைகளை அனுபவித்தவர்.
அவரே சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யம்படி கேட்காவிடின் வேறுயார்தான் கேட்பார்கள்?
திருச்சியில் இருக்கும் தனது கோடிக் கணக்கான சொத்துக்களுக்கு எந்த பாதிப்பும்; வரக்கூடாது என்பதற்காகவா செல்வம் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்?
ஏனெனில், உங்கள் ஆட்சி சர்வதேசரீதியில் ஒரு எடுத்தக்காட்டு என்று வேறு புகழ்ந்துள்ளார். இந்த வரியை அந்த ஜெயாஅம்மையார்கூட நம்பமாட்டார்.
No comments:
Post a Comment