•கொடி முக்கியம்தான். ஆனால் அதைவிட
மக்களை ஒன்றுபடுத்தி போராடுவது மிகவும் முக்கியம்!
மக்களை ஒன்றுபடுத்தி போராடுவது மிகவும் முக்கியம்!
அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கொடி தொடர்பாக பிரச்சனை எற்பட்டது.
பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்ட ஒரு டிவி நிகழ்வில்கூட கொடி தொடர்பாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக புலம்பெயர் மக்கள் மத்தியில் விரக்தி தோன்றியிருப்பதாக சில ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் காட்ட முனைகின்றன.
போராட்டம் இருக்கும் சமூகத்தில் பிரச்சனை இருப்பது சகஜம். பிரச்சனை இல்லையேல் அங்கு போராட்டம் இல்லை , இயக்கம் இல்லை என்று பொருள்.
ஒரு பொருள் எதிர் எதிர் தன்மை கொண்டிருப்பதும் அவ் தன்மையே அப்பொருளின் இயக்கத்திற்கு காரணம் என்றும் அறிவியல் கூறுகிறது.
அதேபோல் சமூகத்தின் அகத்தே மற்றும் புறத்தே உள்ள முரண்பாடுகள் பற்றியும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் ஆசான் மாவோ எமக்கு போதித்துள்ளார்.
நாட்டில் ஆயுத முனையில் மக்களை அடக்கிவைத்திருக்கும் இரலங்கை அரசு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் போராட்டங்களை எப்படி நசுக்குவது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றது.
எனவே இலங்கை அரசானது எமக்கிடையேயான முரண்பாடுகளை பயன்படுத்தி எம்மை நசுக்கி அழிப்தற்கு நாம் ஒருபொதும் இடமளித்துவிடக்கூடாது.
ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும் என்று கூறி கருத்து முரண்பாடுகளை எப்படி தீர்த்தக்கொள்வது என்பதற்கு தோழர் மாவோ எமக்கு வழிகாட்டியுள்ளார்.
எனவே அவர் காட்டியபடி எமக்கிடையேயான கருத்து முரண்பாடுகளை ஆக்கபூர்வமான உரையாடல்கள் மூலம் நிச்சயமாக தீர்க்க முடியும். அவ்வாறே தீர்க்க வேண்டும்.
ஒரு இனத்திற்கு அடையாளம் முக்கியம். அந்தளவில் கொடியும் முக்கியம்தான். ஆனால் அதனை மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்ளும்வரை அவர்களை ஒருபோதும் பலவந்தமாக நிர்ப்பந்திக்க கூடாது.
கொடியின் அவசியத்தை வலியுறுத்தபவர்கள் இதனை உணர்ந்து அதன் வழியில் மக்களை ஒன்றுபடுத்த முயல வேண்டும்.
இங்கு மிக மிக முக்கியம் என்னவென்றால் எந்தவொரு போராட்டமும் மக்களை ஒன்றுபடுத்தவதாக அமைய வேண்டுமேயொழிய எக் காரணம் கொண்டும் மக்களை மேலும் மேலும் பிரிக்க வழி செய்யக்கூடாது.
50 ஆயிரம் மக்கள் திரண்ட போராட்டங்கள் இப்போது வெறும் 500 பேர் கலந்து கொள்ளும் போராட்டமாக ஏன் சுருங்கியது என்ற கேள்வியை நாம் எமக்குள் முதலில் எழுப்ப வேண்டும்.
தமது தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளாத எந்த இனமும் விடுதலை அடைய முடியாது என்று ஆசான் லெனின் கூறியுள்ளார். இதனை நாம் கவனத்தில் கொள்வோம்.
No comments:
Post a Comment