ஞாயன்மாரே!
இதற்கு ஒரு நியாயம் சொல்வீரா?
இதற்கு ஒரு நியாயம் சொல்வீரா?
ராஜீவ் காந்தி கொலைக்காக 36 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பாக மரணதண்டனை விதித்தீர்கள்.
25 வருடமாகியும் 7 பேரை விடுதலை செய்யாமல் சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.
பரோல் லீவுகூட அவர்களுக்கு வழங்காமல் அநீதி இழைக்கின்றீர்கள்.
1987ல் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய ராணுவம்
•8000க்கு அதிகமாக அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது
•500 க்கு அதிமான தமிழ் போராளிகளைக் கொன்றது
•600 க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது
•பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துகளை சேதமாக்கியது
இத்தனைக்கும் காரணமான இந்திய ராணுவம் ஏன் விசாரிக்கப்படவில்லை?
இத்தனைக்கும் உத்தரவிட்ட ராஜீவ் காந்தி ஏன் விசாரிக்கப்படவில்லை?
இவையாவும் எப்போது விசாரிக்கபடும்?
இவர்களுக்கு எப்போது தண்டனை வழங்கப்படும்?
இந்த தமிழ் மக்களுக்கு எப்போது நியாயம் வழங்கப்படும்?
1991ம் ஆண்டு நடந்த ராஜீவ் கொலை விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டதாக கூறும் ஞாயம்மார், 1987ல் நடந்த அப்பாவி தமிழ் மக்களின் கொலைக்கு எப்போது நியாயம் வழங்குவார்கள்?
இந்திராகாந்தி கொலையடுத்து சீக்கிய மக்கள் கொல்லப்பட்டமைக்கு பொது மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி தமிழ் மக்களிடம் இதுவரை மன்னிப்பு கோராதது ஏன்?
ராஜவ்காந்தி உயிர் மட்டும்தான் பெறுமதியானது. தமிழ் மக்களின் உயிர்கள் பெறுமதியற்றதா?
No comments:
Post a Comment