•இந்திய ஆக்கிரமிப்புக்கு தொடர்ந்தும் துணைபோகும் "டெலொ" இயக்கம்
1983ல் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் பிறக்கும் என்று கூறிய டெலோ இயக்கம் இப்போது இனப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கூறுகிறது.
தமிழீழம் எடுக்க இந்தியா உதவும் என்று அன்று கூறிய டெலோ இயக்கம் இப்போது இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவும் என்கிறது.
இத்தனை அழிவிற்கு பின்பும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்தியா இனப்பிரச்சனைக்கு தீர்வு காண உதவும் என்று எப்படி இவர்களால் கூறமுடிகிறது?
அன்று டெலோ தலைவர் சிறீயண்ணா இந்தியாவை முழுமையாக நம்பினார். இந்திய ஆக்கிரமிப்பக்கு முழுமையாக ஒத்துழைத்தார்.
அவர் இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் போன்றவர்களை கொன்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இராசலிங்கம் , தரைரத்தினம் போன்றவர்களையும் கொல்வதற்கு உத்தரவு இட்டார். ஆனால் நல்லவேளை தாஸ் தலைமையிலான குழவினர் அதனை நிறைவேற்றவில்லை.
இத்தனைதூரம் இந்திய விசுவாசியாக இருந்த சிறீ அண்ணா கொல்லப்படட்போது இந்தியா காப்பாற்ற முயலவில்லை. இந்தியா விரும்பியிருந்தால் நிச்சயம் அவரை காப்பாற்றியிருக்கலாம்.
இதை எல்லாம் நன்கு தெரிந்தும் உணர்ந்தும் மீண்டும் டெலொ இயக்கம் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போகிறது.
அன்று இயக்கங்களில் ஊடுருவி அழிவுகளை மேற்கொண்ட இந்திய உளவு நிறுவனம் தற்போது யாழ் இந்திய தூதர் மூலம் தமிழ்மக்களிடையே ஊடுருவி அழிவுகளை மேற்கொள்ள முயல்கிறது.
கரவெட்டியில் கன்பொல்லை கிராமத்திற்கு டெலொ தலைவர் செல்வம் அடைகலநாதனுடன் சென்ற யாழ் இந்திய தூதர் நடராஜன் மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதை கண்டு தான் வருந்துவதாகவும் அவர்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்று நீலிக் கண்ணீர் வடித்துள்ளார்.
இதே இந்தியாவில் அகதி முகாம்களில் மக்கள கஸ்டப் படுகிறார்கள். இதே இந்தியாவில் அகதிகள் சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இரக்கம் கொள்ளாத இந்தியா கன்பொல்லை கிராம மக்கள் மீது இரக்கம் கொள்ளுமா?
இந்தியாவில் அம்பேத்கார் சிலைகளை உடைக்கும் இந்திய அரசு யாழ்ப்பாணத்தில் அம்பேத்கார் விழா கொண்டாடியது. தாழ்தப்பட்ட சாதி மக்கள்; மீது உண்மையில் இந்திய தூதருக்கு அக்கறை இருக்குமானால் இதே கண்பொல்லை கிராமத்தில் இருக்கும் சேதப்பட்ட சிலையை முதலில் புனரமைப்பு செய்து கொடுக்கலாமே!
இயக்கங்களில் ஊடுருவி அழிவுகளை மேற்கொண்ட இந்தியா தற்போது தமிழ்மக்களிடையே காணப்படும் சாதிப் பிளவுகளை கூர்மையாக்கி தனது ஆக்கிரமிப்பை மேற்கொள்ள முனைகிறது.
இதற்கு வழக்கம்போல் டெலொ இயக்கம் துணை போகிறது. ஒரு காலத்தில் தான் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்ததையும் மறந்து டெலோ தலைவர் செல்வம் இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போகிறார்.
டெலொ தலைவர் சிறீயண்ணாவுக்கு நினைவு தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு பிரதம விருந்தினராக இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போகும் ஊடகவியலாளர் பகவான்சிங் அழைக்கப்பட்டிருக்கிறார்.
லண்டனில் ஊடகவியலாளர் பன்னிர் செல்வம் வந்து தமிழ் மக்களுக்கு போதிக்கிறார். யாழ்பாணத்தில் பகவான்சிங் வந்து போதிக்கவுள்ளார்
தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது!
No comments:
Post a Comment