•பிசாசைவிட பேய் சிறந்தது என்று தமிழக மக்கள் முடிவு செய்துள்ளார்கள்!
பேய் அல்லது பிசாசை தெரிவு செய்யும்படி தமிழக மக்கள் முன் தேர்தல் வைக்கப்பட்டது.
தமிழக மக்கள் திமுக காங்கிரஸ் கூட்டை பிசாசுவாக கணித்து அதைவிட அதிமுக என்னும் பேய் பரவாயில்லை என முடிவு செய்துள்ளார்கள்.
தமிழக மக்கள் இந்த தேர்தலில் பல சிறந்த முடிவுகளை கொடுத்துள்ளார்கள்.
(1) வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை தேர்தல் கமிசன் செலவு செய்து பல விளம்பரங்களை போட்டும் மக்கள் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவு புறக்கணிப்பை செய்துள்ளார்கள்.
(2) மக்கள் தேர்தல் பாதையில் நம்பிக்கை இழந்து வருவது தேர்தல் கமிசனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும்.
(3) கலைஞர் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து ஈழத் தமிழ்மக்களுக்கு செய்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ அல்லது மன்னிக்கவோ தயாரில்லை என்பதைக் காட்டியுள்ளார்கள்.
(4) பணத்தின் மூலம் மற்ற கட்சியினரை உடைத்து, பணத்தின் மூலம் ஊடகங்களை வாங்கி பணத்தின் மூலம் வெற்றியை பெற்றுவிட முடியும் என நினைத்த கலைஞரின் எண்ணத்தை முறியடித்துள்ளார்கள்.
(5) மதவெறி பிஜேபி கட்சிக்கு படுதோல்வியைக் கொடுத்துள்ளார்கள்.
(6) போலிக் கம்யுனிஸ்ட்டுகள் மட்டுமன்றி சாதிக்கட்சிகளும் தூக்கியெறியப்பட்டுள்ளார்கள்.
(7) அனைத்து கட்சிகளுடனும் இறுதிக்கணம்வரை பேரம் பேசிய விஜயகாந் கட்சியை தோற்கடித்துள்ளார்கள்.
(8) கலைஞர் தன் மகனுக்கு செய்யவிருந்த வாரிசு அரசியலை முறியடித்துவிட்டார்கள்.
(9) தேர்தலை முன்னிட்டு கட்சிகள் முன்வைத்த தேர்தல் அறிக்கையை நம்பவில்லை என்பதை மக்கள் காட்டியுள்ளார்கள்.
(10) எல்லாவற்றையும்விட ஒரு சிறந்த மாற்றுக்கான இடைவெளியை மக்கள் கொடுத்துள்ளார்கள்.
•யார் வெல்ல வேண்டும் என்பதைவிட திமுக காங்கிரஸ் கூட்டு வெல்லக்கூடாது என்பதை தமிழக மக்கள் உறுதியாக தெரியப்படுத்தியுள்ளார்கள்.
•எந்தவொரு தேசியக் கட்சியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை காட்டியுள்ளார்கள்.
•மக்கள் தந்த இந்த இடைவெளியைப் பயன்படுத்தி உண்மையான மாற்று சக்தி உருவாக்கப்பட வேண்டும்.
•தேர்தல் பாதைக்கு மாற்று என்பது ஆயுதம் ஏந்திய மக்கள் யத்தப் பாதையாகும். இதை மாற்று சக்திகள் உணர வேண்டும்.
எதிர்காலம் குறித்து நம்பிக்கையளிக்கும் முடிவு தந்த தமிழக மக்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்பது உண்மைதான்.
No comments:
Post a Comment