•சிறீதரன் எம்.பி யின் கேள்விக்கு “டெலோ” தலைவர் செல்வம் எம்.பி பதில் அளிப்பாரா?
தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இன்னொரு தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் தமிழர்விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென்று கேட்டுள்ளார்.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தையடுத்து அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் , சம்பந்தன் போன்றவர்கள் எல்லாம் இந்தியா சென்று தங்கியிருந்தனர்.
தர்மலிங்கம், ஆலாலசுந்தரம், இராசலிங்கம், துரைரத்தினம் ஆகிய நாலு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.
இந்திய உளவுப்படை “றோ” வின் வேண்டுகோளுக்கிணங்க டெலோ தவைர் சிறீசபாரத்தினம் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சுட்டுக்கொல்லுமாறு தமது இயக்கத்தினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
யாழ்ப்பாண டெலோ பிரிவால் கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரமும் உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வடமராட்சி டெலோ தளபதி தாஸ் சிறீசபாரட்ணத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்தமையினால் துரைரத்தினமும் இராசலிங்கமும் சுட்டுக்கொல்லப்படவில்லை.
இவர்கள் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்தை தற்போதைய டெலோ தலைவர் செல்வம் கூறுமாறு சிறீதரன் கேட்டுள்ளார்.
இவ்வளவு காலமும் கூடஇருந்த செல்வம் அடைகலநாதனிடம் கேட்காத இந்த கேள்வியை இப்போது ஏன் சிறீதரன் கேட்கிறார் என்று புரியவில்லை?
அதுமட்டுமல்ல 30 வருடம் நாட்டைவிட்டு ஓடியவர்கள் இப்போது எதற்காக வந்து புலிகளால் சுடப்பட்டவர்களுக்கு விழா எடுக்கிறார்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்?
அத்தோடு இவற்றின் பின்னால் மறைந்திருக்கும் கரம் எது வென்றும் அது விரைவில் அம்பலத்திற்கு வரும் என்றும் கூறியளள்hர்.
மீண்டும் இந்திய உளவுப்படையின் பின்னனியில் டொலோ அமைப்பு செயற்பட முனைவதாகவே அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சிறீதரன் எழுப்பியுள்ள கேள்விகள். நியாயமானவை. இதற்கு செல்வம் அடைக்கலநாதன் கண்டிப்பாக பதில் சொலல வேண்டும்.
No comments:
Post a Comment