•எவன்டா மாவை சேனாதிராசாவுக்கு
“ஈழத்து சே” என்று பட்டம் கொடுத்தது?
“ஈழத்து சே” என்று பட்டம் கொடுத்தது?
சேகுவாரா ஆஜென்டீனாவில் பிறந்திருந்தாலும் கியூபாப் புரட்சியில் பங்கெடுத்தார். கியூபாவில் அவருக்கு அமைச்சு பதவி கிடைத்தபோதும் அதை துறந்து பொலிவியாவில் போராட செனறபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால் மாவை சேனாதிராசா ஈழத்தில் போராட்டம் நடைபெற்றபோது குடும்பத்துடன் இந்தியாவில் சொகுசாக வாழ்ந்தவர். பதவிக்காக தன் இனத்தையே காட்டிக் கொடுக்கிறார்.
மாவை சேனாதிராசாவுக்கு “ஈழத்து சே” என்ற பட்டம் கொடுத்திருப்பது சேகுவாராவை கேவலப்படுத்துவதாகும். அவர் அடிக்கடி போராட்டம் வெடிக்கும் என அறிக்கை விடுவதால் அவருக்கு “வெடிகுண்டு முருகேசன்” என்ற பட்டமே பொருத்தமாகும்.
அண்மையில் காணாமல்போனவர்களின் உறவுகளை சந்தித்தபோது “ அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள்” என்று மாவை சேனாதிராசா கூறியுள்ளார்.
காணாமல்போனவர்களின் உறவுகள் 7 வருடங்களாக பொறுத்திருந்து பார்த்து எந்த பதிலும் கிடைக்காத படியால் வேறுவழியின்றி கடந்த 54 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால் மாவை சேனாதிராசாவோ கொஞ்சம்கூட இரக்கமின்றி “நீங்கள் போராடக்கூடாது. அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்ககூடாது” என்று அவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.
இப்படித்தான் சம்பூர் மக்கள் போராடிய போதும் “ இந்தியா தீர்வு பெற்று தரப்போகிறது. எனவே சம்பூர் நிலத்தை கேட்டு இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடாது” என்று மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.
அதுமட்டுமன்றி, பாராளுமன்றத்தின் மூலம் எதுவும் கிடைக்குதில்லை. எனவே பாராளுமன்றத்தை பகிஸ்கரியுங்கள் என்று கேட்டபோது “ நாங்கள் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்தால் டக்ளஸ் ஆட்கள் போய்விடுவார்கள்” என்று மாவை சேனாதிராசா முன்னர் கூறியிருந்தார்.
முன்பு டக்ளஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்தபோது அவரை ஒட்டுக்குழு என்று அழைத்த மாவை சேனாதிராசா இப்போது தான் அரசுக்கு ஆதரவு கொடுப்பது மட்டுமன்றி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று வேறு மக்களுக்கு உபதேசம் செய்கிறார்.
அநீதி கண்டு துடித்தால் நீயும் என் தோழனே என்று சேகுவாரா கூறினார். ஆனால் ஈழத்து சே மாவை சேனாதிராசா அநீதிக்கு துணை போவது மட்டுமன்றி மக்களையும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்கிறார்.
இவர் தன் வாழ்க்கையில் 4 வருடம் சிறையில் இருந்திருக்கிறார். இதுதான் இவர் செய்த தியாகம். ஆனால் இதையே சொல்லி 40 வருடம் எம்.பி யாக இருக்கிறார். இந்தியாவில் ஒரு வீடு. மாவிட்டபுரத்தில் இன்னொரு வீடு. கொழும்பில் அரச பங்களா.
இவருக்கு வாக்கு போட்ட மக்கள் றோட்டில் நின்று போராடுகிறார்கள். ஆனால் இவரோ 5 கோடி ரூபா சொகுசு வாகனத்தில் சென்று “அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தனக்கு சஞ்சலமாக இருக்கிறது” என்று மக்களுக்கு சொல்கிறார்.
1983ம் ஆண்டளவில் அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன் மதுரையில் மருத்துவ கல்வி கற்றுக்கொண்டு இயக்கம் நடத்தினார். அந்த இயக்கத்திற்கு இளைஞர்களை சேர்த்து அனுப்புமாறு பகிரதன் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் அனுப்பினார்.
மாவை சேனாதிராசாவுக்குரிய கடிதத்தை கொண்டு வந்தவர் கடிதத்துடன் மன்னார் தள்ளாடி ராணுவ முகாமில் கைது செய்யப்பட்டுவிட்டார். அந்த காலத்தில் இப்படி ஆதாரத்துடன் கைது செய்யப்படுபவர்கள் உடனே கொல்லப்டுவார்கள் அல்லது சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்படுவார்கள்.
ஆனால் பகிரதனின் கடிதம் கொண்டு வந்தவர் உடனே விடுதலை செயய்ப்பட்டு மலேசிய விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். மாவை சோனதிராசாவுக்கும்கூட எந்த வழக்கும் போடப்படவில்லை.
ஏனெனில் கடிதம் கொண்டு வந்த இளைஞர் அமிர்தலிங்கத்தின் நெருங்கிய உறவினர். அமிர்தலிங்கம் நேரடியாக ஜே.ஆர் ஜெயவாத்தனவுடன் தொலையேசியில் உரையாடியவுடன் இவ் அதிசயங்கள் யாவும் நடந்தன.
இங்கு எனது வருத்தம் என்னவெனில்,
பகிரதன் தன் மருத்துவ கல்வியை நிறுத்தவில்லை. மாறாக பல இளைஞர்களின் கல்வியை குழப்பி இயக்கம் நடத்தினார்.
பகிரதன் தன் மருத்துவ கல்வியை நிறுத்தவில்லை. மாறாக பல இளைஞர்களின் கல்வியை குழப்பி இயக்கம் நடத்தினார்.
அமிர்தலிங்கம் கைது செய்ப்ட்டது தன் உறவினர் என்றவுடன் ஜே.ஆருடன் தொலைபேசியில் பேசி விடுதலை செய்வித்தார்.
மாவைசேனாதிராசா பல இளைஞர்களை சேர்த்து பகிரதன் இயக்கத்திற்கு கொடுத்தார். ஆனால் அவர் தன் பிள்ளைகளை இயக்கத்திற்கு அனுப்பவில்லை.
இப்போதும்கூட மாவை சேனாதிராசாவின் பிள்ளைகள் லண்டனில் நல்ல நிலையில் உள்ளார்கள். ஆனால் நாட்டில் தம் பிள்ளைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்கும் தாய்மாரிடம் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றி அவர் கேட்கிறார்.
மாவை சேனாதிராசா சோத்தை தின்கிறாரா? அல்லது வேறு எதையாவது தின்கிறாரா?
No comments:
Post a Comment