•இவர்கள் செய்த குற்றம் என்ன?
இவர்கள் எதற்காக கைது செய்யப்பட வேண்டும்?
இவர்கள் எதற்காக நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட வேண்டும்?
இவர்கள் மக்கள் பணத்தை ஊழல் செய்தமைக்காக கர்நாடக சிறையில் அடைக்கப்படவில்லை.
இவர்கள் 2ஜி ஊழலுக்காக திகார் சிறையில் அடைக்கப்படவில்லை.
இவர்கள் வோட்டுக்காக மக்களுக்கு 4 ஆயிரம் ரூபா கொடுத்த அரசியல்வாதிகள் அல்லர்.
இவர்கள் தேர்தல் கமிசனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதிகள் அல்லர்.
இவர்கள் மாணவர்கள். இவர்கள் செய்த ஓரே குற்றம் நெடுவசாசல் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ரயிலில் வந்தது ஆகும்.
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு சாத்வீக முறையில் போராட மக்களுக்கு உரிமை உண்டு என்கிறார்கள்.
ஆனால் நெடுவாசல் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பறையடித்து பிரச்சாரம் செய்தமைக்காக கோவை பொதுநல மாணவ எழுச்சி இயக்கத்தை சேர்ந்த 7 மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தது மட்டுமன்றி மாணவிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்துள்ளனர்.
அதுமட்டுமன்றி மாணவர்கள் நெடுவாசல் மக்களுக்காக உண்டியல் மூலம் சேர்த்த முப்பது அயிரம் ரூபா பணத்தையும் பொலிசார் அமுக்கிவிட்டனர். வெறுமனே 340 ரூபா மட்டுமே கைப்பற்றப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளனர்.
தமிழ்நாடு பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல, அது அரசின் ஏவல் நாய் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
ஆனால் மக்களுக்கு ஆதரவாக போராடும் மாணவர்களை நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி சிறையில் அடைக்கும் பொலிஸ் அராஜகத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும்.
No comments:
Post a Comment