•முட்டாளாக இருக்க எந்த மனிதனுக்கும் உரிமை உண்டு. ஆனால்
முட்டாள்தனத்தை போதிக்க ஒரு மனிதனுக்கும் உரிமை இல்லை.
முட்டாள்தனத்தை போதிக்க ஒரு மனிதனுக்கும் உரிமை இல்லை.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விரும்பினால் பிரேமானந்தாவின் சீடனாக இருக்கலாம். ஆனால் அவர் பிரேமானந்தாவை நியாயப்படுத்த முயலக்கூடாது.
அதுவும் பொறுப்புள்ள மாகாண முதலமைச்சர் என்ற பதவியில் இருந்துகொண்டு ஒரு குற்றவாளிச் சாமியாரை நியாயப்படுத்தும் முட்டாள்தனத்தை செய்யவேகூடாது.
காஞ்சி சங்கராச்சாரியார் செய்த குற்றங்களையே பிரோமனாந்தாவும் செய்தார். ஆனால் காஞ்சி சங்கராச்சாரி பிராமணர் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். பிரோமானந்தா பிராமணர் அல்லாததால் தண்டிக்கப்பட்டார்.
பிரேமானந்தா கொலை கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் இலங்கையர் என்பதால் ஜாமீனில் விடுதலை அடைந்தால் துறையூர் சிறப்பு முகாமில் அடைக்க பொலிஸ் அதிகாரிகள் அப்போது திட்டமிட்டனர்.
அப்போது துறையூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த நாங்கள் எங்களுடன் பிரோமானந்தாவை அடைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
பிரேமானந்தாவின் லீலைகளை நாங்கள் முன்னரே அறிந்திருந்தமையினால் இந்த எதிர்ப்பை தெரிவித்தோம். மீறி அடைத்தால் அவரை அடித்தே கொல்லுவோம் எனவும் கூறினோம்.
எமது எதிர்ப்பையடுத்து பிரோமானந்தாவை சிறப்புமுகாமில் அடைக்கும் எண்ணத்தையே அதிகாரிகள் கைவிட்டு விட்டனர்.
பின்னர் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இறுதியாக அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை நோய்வாய்ப்பட்டு மரணமானார்.
இங்கு வேடிக்கை என்னவெனில் பிரேமானந்தா தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேளையிலும் அவரை கடவுள் என கூறிக்கொண்டு பல வெளிநாட்டினர் அவரை சந்தித்து ஆசி பெற்றனர்.
இத்தகைய ஒரு முட்டாள்தனமே மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் பிரோமானந்தா மீதான நம்பிக்கையும் பக்தியும் ஆகும்.
பிரோமானந்தாவை கடவுள் என்று நம்புவதற்கு விக்கினேஸ்வரனுக்கு உரிமை உண்டு. ஆனால் அதற்காக பிரோமானந்தாவை இயேசு கிறிஸ்துவடன் ஒப்பிட்டு நியாயப்படுத்துவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
விக்கினேஸ்வரன் விரும்பினால் மாகாண முதல்வர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக பிரோமானந்தாவின் புகழ் பரப்பலாம். அதைவிடுத்து மாகாண முதல்வர் என்ற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு இத்தகைய முட்டாள்தனத்தை பரப்புவதற்கு அவருக்கு உரிமை இல்லை.
No comments:
Post a Comment