•தானே பொல்லுக் கொடுத்து அடி வாங்கிய லண்டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு!
கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் தந்தை செல்வநாயகத்தின் நினைவு தினக் கூட்டம் ஈஸ்ட்காமில் நடைபெற்றது.
4.30 மணிக்கு ஆரம்பமாகும் என்ற அறிவித்த கூட்டம் வழங்கம்போல் மிகவும் தாமதமாக 6.30 மணிக்கு சுமார் 50 பேர்களுடன் ஆரம்பமாகியது.
கடந்த 40 வருடமாக செல்லா நினைவு தினம் கொண்டாடாமல் இருந்தவர்கள் இப்போது எதற்காக திடீரென்று கொண்டாடுகிறார்கள் என்ற கேள்வி ஒருபறம் இருக்க இதில் ஏன் அமைச்சர் மனோகணேசனை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள் என்ற கேள்வி மறுபுறம் எழுந்தது.
மானோ கணேசனின் தந்தையார் வி.பி கணேசன் தந்தை செல்வாவின் மரண ஊர்வலத்தில் 5 மைல் நடந்து வந்தவர் என்பதால் மனோ கணேசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதாக ஜ.ரி.சம்பந்தன் கூறினார்.
ஆனால் அமைச்சர் மனோகணேசன் தன்னை அழைத்தவர்கள் என்று கொஞ்சம்கூட முகமன் பார்க்கவில்லை. கருணை காட்டவில்லை. மனுசன் தமிழ்தேசியகூட்டமைப்பை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டுவிட்டார்.
அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி வால் பிடிக்கலாம் என்று விழா ஏற்பாட்டாளர்கள் நினைத்தார்கள். ஆனால் அமைச்சரோ தமிழ்தேசியகூட்டமைப்பை தோலுரித்துவிட்டார்.
அமைச்சர் மனோ கணேசனின் நீண்ட பேச்சில் இருந்து சில விடயங்கள்,
•இந்தியா தன் சுயநலத்திற்காகவே இலங்கையில் தலையிடுகிறது. இந்தியா ஒருபோதும் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தராது.
•ஒருவேளை சிங்கள மக்கள் தமிழீழம் தருவதற்கு மன்வந்தாலும் தமிழீழம் அமைய இந்தியா ஒருபோதும் அனுமதியாது.
•யுத்தம் முடிந்தபோதும் இனப்பிரச்சனை அப்படியே இருக்கிறது. அதற்கு இன்னும் தீர்வு தரப்படவில்லை.
•வரப்போகும் தீர்வில் வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை. காணி பொலிஸ் அதிகாரம் இல்லை.
•அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியாக ஜனாதிபதி பிரதமர் ஆகியோரிடம் சென்று விலியுறுத்துவொம். சிங்கள மக்களுக்கு விளக்குவொம் என சம்பந்தர் அய்யாவிடம் கொரிக்கை வைத்தேன். அனால் அவர் இன்னும் அதற்கு பதில் தரவில்லை.
மனோ கணேசன் ஒரு இந்திய வம்சாவளித் தமிழர். இருந்தும் இந்தியாவுக்கு எதிராக துணிந்து கருத்து கூறுகிறார்.
மனோ கணேசன் இலங்கை அரசில் ஒரு அமைச்சர். இருந்தும் இலங்கை அரசுக்கு எதிராக துணிந்து கருத்து கூறுகிறார்.
மனோ கணேசன் தான் ஒரு தமிழர் என்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாருக்குமாக குரல் கொடுக்கும் உணர்வு தன்னிடம் இருப்பதாக கூறுகிறார்.
ஆனால,;
சம்பந்தர் அய்யா எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தயங்குவது ஏன்?
இத்தனை அழிவிற்கும் பின்பும் இத்தனை அழிவிற்கு காரணமான இந்திய அரசை எதிர்த்து சம்பந்தர் அய்யா குரல் கொடுக்க மறுப்பது என்?
இங்கு எமது கேள்வி என்னவெனில் மனோ கணேசனால் இத்தனை தைரியமாக குரல் கொடுக்க முடியுமாயின் ஏன் சம்பந்தர், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களால் குரல் கொடுக்க முடியாது?
No comments:
Post a Comment