•ஒரு வாழைப்பழம் இங்கே இருக்கு
மற்ற வாழைப்பழம் எங்கே இருக்கு?
மற்ற வாழைப்பழம் எங்கே இருக்கு?
08.11.2014 யன்று கொழும்பில் உள்ள இநதிய தூதர் வை.கே.சின்கா தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களையும் அழைத்து பேசியுள்ளார்.
இவர்களின் சந்திப்பு மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரியை ஆதரிக்கும்படி கூறி இருவருக்கும் இந்திய தூதர் பணம் கொடுத்துள்ளார்.
இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் 20 கோடி ரூபா பெற்றுக்கொண்டதாக அக் கட்சியின் தவிசாளரே ஒத்துக்கொண்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஹக்கீமுக்கு 20 கோடி ரூபா வழங்கப்பட்டது எனில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு நிச்சயம் இதைவிட இரட்டி மடங்கு பணம் வழங்கப்பட்டிருக்கும்.
இங்கு எமது கேள்வி என்னவெனில்,
(1) சம்பந்தர் அய்யாவுக்கு எத்தனை கோடி ரூபா பணம் இந்திய தூதரால் வழங்கப்பட்டது?
(2) இந்த பணம் பெற்றுக்கொண்டது மற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தெரியுமா?
(3) இந்த பணத்திற்குரிய வரவு செலவு கணக்கு யாரிடம் உள்ளது?
குறிப்பு- 2002 ம் ஆண்டு நோர்வேயிடமிருந்து 30 கோடி ரூபா ஹக்கீம் பெற்றுக்கொண்டதாக அக் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அப்படியென்றால் இப்படி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இதுவரை எத்தனை கோடி பணம் கிடைத்துள்ளது?
அப்படியென்றால் இப்படி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இதுவரை எத்தனை கோடி பணம் கிடைத்துள்ளது?
யாராவது இதற்கு பதில் தருவீர்களா?
No comments:
Post a Comment