•ஹர்த்தால் போராட்டம் வெற்றி பெறட்டும்!
50 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வேறுவழியின்றி ஹர்த்தால் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்கள்.
நாளைய தினம் (27.04.2017) வடக்கு கிழக்கு பகுதிகளில் நடக்கவிருக்கும் ஹர்த்தாலுக்கு மக்கள் பூரண ஆதரவு வழங்க வேண்டும்.
யுத்தம் முடிந்து 8 வருடமாகிவிட்டது. இன்னமும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு அரசு தீர்வு வழங்கவில்லை.
அரசு தீர்வு வழங்கும் என காத்திருந்தால் இன்னும் 80 வருடம் பொறுமையுடன் காத்திருந்தாலும்கூட தீர்வு வரப்போவதில்லை.
எனவேதான் தீர்வு கிடைக்கும்வரை போராடப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு முழு ஆதரவினை வழங்கவேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.
நாளை நடைபெற இருக்கும் ஹர்த்தால் போராட்டத்திற்கு இதுவரை
• தமிழ்தேசிய கூட்டமைப்பு
• இலங்கை ஆசிரியர்கள் சங்கம்
• யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
• அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
• தமிழ்தேசிய மக்கள் முன்னணி
• வவுனியா போக்குவரத்து தொழிலாளர் சங்கம்
• தமிழ்மக்கள் பேரவை
• புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சி
என்பவை ஆதரவு தெரிவித்துள்ளன. இன்னும் பல ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒற்றுமையாக பூரண ஹர்த்தால் அனுஸ்டிப்பதன் மூலம்,
(1)காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு உண்டு என்பதை காட்ட வேண்டும்.
(2)தமிழ் மக்கள் தீர்வு கிடைக்கும்வரை போராட தயங்கமாட்டார்கள் என்பதை காட்ட வேண்டும்.
(3)இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும்.
(2)தமிழ் மக்கள் தீர்வு கிடைக்கும்வரை போராட தயங்கமாட்டார்கள் என்பதை காட்ட வேண்டும்.
(3)இலங்கை அரசு தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும்.
எனவே தமிழ் மக்களே!
நாளை நடைபெறும் ஹஹர்த்தால் போராட்டம் பூரண வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்!
நாளை நடைபெறும் ஹஹர்த்தால் போராட்டம் பூரண வெற்றிபெற முழு ஒத்துழைப்பு வழங்குங்கள்!
No comments:
Post a Comment