•புரூட்டஸ் நீயுமா?
ஜரோப்பிய வரிச்சலுகை இலங்கை அரசுக்கு வழங்கக்கூடாது என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால் இலங்கை அரசின் குழுவில் ஒருவராக வந்து இலங்கைக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும் என்று சிறிதரன் எம்.பி கோரியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
காணாமல்போனவரின் உறவுகள் சிறிதரன் எம்.பி யின் கிளிநொச்சி தொகுதியில் 60 நாட்களாக போராட்டம் நடத்துகின்றார்கள்.
அவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லாத சிறீதரன் எம்.பி அரசுக்காக ஜரோப்பா சென்று வரிச்சுலுகை வழங்குமாறு கோரிக்கை வைக்கிறார்.
வரிச் சலுகைக்காக சிறீதரன் குரல் கொடுத்தது தவறு இல்லை. மாறாக காணாமல் போனவர்களின் உறவுகளை அழைத்து அரசு பேசினால் அரசுக்காக ஜரோப்பாவில் குரல் கொடுக்க தயார் என்றாவது ஒரு நிபந்தனையை முன்வைத்திருக்கலாமே?
ஏன் எந்த நிபந்தனையும் இன்றி சிறீதரன் இலங்கை அரசை ஆதரிக்க வேண்டும்? சுமந்திரன் போல் சிறீதரனும் இலங்கை அரசால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டாரா?
யுத்தம் முடிந்து எட்டு வருடமாகிவிட்டது.
•இன்னும் காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
•இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
•சிறை மற்றும் சிறப்புமகாமில் உள்ளோர் விடுதலை செய்யப்படவில்லை
இவை குறித்து அரசுடன் பேசாமல்
இவை குறித்து அரசுக்கு நிபந்தனை விதிக்காமல்
இலங்கை அரசுக்கு இரண்டு வருட அவகாசம் கொடுத்தால் என்னஅர்த்தம்?
இவை குறித்து அரசுக்கு நிபந்தனை விதிக்காமல்
இலங்கை அரசுக்கு இரண்டு வருட அவகாசம் கொடுத்தால் என்னஅர்த்தம்?
அதுபோதாது என்று 10 பில்லியன் டாலர் பெறுமதியான வரிச்சலுகை பெற்றுக் கொடுத்தால் என்ன அர்த்தம்?
சிறீதரன் அவர்களே!
வாக்கு போட்ட மக்கள் மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் பெற்றுக் கொண்டீர்கள்.
காணாமல் போனவர்களின் உறவுகள் பிரதமர் முதல் வரும் தலைவர்கள் கால்களை பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் நல்லுர் வீதியில் புதுவீடு 3 கோடி ருபாவுக்கு வாங்கி உங்கள் குடும்பத்தை வாழ வைத்துள்ளீர்கள்.;
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கிய சம்பந்தர் அய்யா தனக்கு பதவியும் பங்களாவும் ஒரு வருடத்தில் பெற்றுள்ளார். நீங்களோ சம்பந்தர் அய்யா செத்தவுடன் தலைமை பதவியை தரும்படி இந்திய தூதரிடம் கேட்கிறீர்கள்.
ஒருபுறத்தில் மாவீரர் நாளில் தலைவர் பிரபாகரன் போல் விளக்கேற்றி போட்டோ போடுகிறீர்கள். மறுபுறத்தில் ராணுவ தளபதியுடன் சேர்ந்து மழை வேண்டி யாகம் செய்கிறீர்கள்.
ஒருபுறத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் தமிழ்தேசியத்தின் பெயரால் பணம் வசூல் செய்கிறீர்கள். மறுபுறத்தில் அந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வரிச் சலுகைக்கு குரல் கொடுக்கிறீர்கள்.
நீங்களே வரிச் சலுகை வழங்கும்படி கோரினால் இனி புலம்பெயர் தமிழர்கள் எந்த முகத்துடன் வரிச் சலுகை வழங்க வேண்டாம் என கோர முடியும்?
ஒருபுறம் சுமந்திரன் இரண்டு வருட அவகாசம் வழங்கும்படி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தார். மறுபுறம் வரிச் சலுகை வழங்கும்படி நீங்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள்.
நீங்களுமா சிறீதரன் துரோகம் செய்கிறீர்கள்?
No comments:
Post a Comment