•இவனுகளுக்கு வேற வேலையே இல்லையா?
லண்டன் ஈஸட்;காம் நகரில் வெள்ளிக்கிழமையன்று தந்தை செல்வா வுக்கு நினைவு தினம் கொண்டாட உள்ளார்கள் சில பெரிசுகள்.
நாட்டில் மக்கள் தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆதரவாக இதுவரை வாயே திறக்காத இந்த பெரிசுகள் இப்போது எதற்காக செல்வாவுக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள்?
வடையும் தேத்தணியும் ஓசியில் சாப்பிட வேண்டும் என்று ஆசையிருந்தால் ஏதாவது பிரார்த்தனைக் கூட்டம் என்று வைத்து சாப்பிட்டு தொலைக்க வேண்டியதுதானே!
50 நாட்களுக்கு மேலாக மக்கள் அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு ஏன் என்று திரும்பிக்கூட பார்க்கவில்லை. மக்களின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை.
அந்த இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் மனோ கணேசனை அழைத்து தந்தை செல்வாவுக்கு நினைவுதினம் கொண்டாடுவது தந்தை செல்வாவையே கேவலப்படுத்துவது போலாகும் அல்லவா?
இந்த கூட்டத்தை நடத்தும் ஜ.ரி சம்பந்தன் மண்ணெண்ணை மகேஸ்வரன் அமைச்சராக இருந்தபோது ஓடிச்சென்று அவர் அமைச்சில் செயலாளராக பணி புரிந்தவர். மகேஸ்வரனின் அமைச்சு பதவி போனதும் இவர் திரும்பி ஓடி வந்தவிட்டார்.
இப்படி அமைச்சர்களை வால் பிடித்து காரியம் சாதிக்கும் இந்த பெரிசுகள் தந்தை செல்வாவுக்கு நினைவு தினம் நடத்துவதும் தமது நலன்களை சாதித்து கொள்ளவேயன்றி தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல.
தந்தை செல்வா தமது இறுதிக் காலத்தில் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியதாக சொல்கிறார்கள்.
அகிம்சை போராட்டத்தால் தீர்வு பெறமுடியவில்லை என்பதால்தான் தந்தை செல்வா இந்த வசனத்தை கூறியதாக அப்போது நாம் நினைத்தோம்.
ஆனால் பிற்காலத்தில் இந்த ஜ.ரி சம்பந்தன் போன்றவர்கள் வந்து தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பதை நினைத்தே அவர் இந்த வசனத்தை கூறியிருப்பார் என இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment