•சுத்துமாத்து சுமந்திரன்
இப்ப என்ன சொல்லப் போகிறார்?
இப்ப என்ன சொல்லப் போகிறார்?
சுமந்திரன் லண்டன் வந்துபோது “புலத்தில் உள்ளவர்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. தாயகத்தில் உள்ள மக்கள் கேட்டால் பதில் சொல்லுவோம்” என்று கூறியிருந்தார்.
லண்டனில் உள்ள தமிழர்கள் கேள்விதான் கேட்க இருந்தார்கள். ஆனால் சுமந்திரன் பயந்து கூட்டத்தையே ரத்துப் பண்ணிவிட்டார்.
இன்று வவுனியாவில் சம்பந்தர், சுமந்திரன் இருவரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டுள்ளன. இருவரும் இறந்துவிட்டதாக கருதி இறுதிக் கிரியைகளும் செய்யப்பட்டுள்ளன.
இதைச் செய்தவர்கள் இளைஞர்கள் அல்ல. வயதான பெரியவர்களும் பெண்களுமே செய்துள்ளனர்.
பொதுவாக ஒரு கொடியவர் இறந்துவிட்டாலே “பாவம். இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம்” என இரக்கப்படுபவர்கள் பெண்கள். அவர்களே இந்த இருவரின் கொடும்பாவியை எரித்து இறுதிக் கிரியைகளும் செய்துள்ளனர்.
இதை இவர்கள் எதோ உணர்ச்சிவசப்பட்டு ஒரே நாளில் செய்துவிடவில்லை. 365 நாட்கள் வீதியில் உட்கார்ந்து போராடி விட்டே செய்துள்ளனர்.
காணாமல்போனவர்களின் உறவுகள் கடந்த 365 நாட்களாக கிளிநொச்சி , வவுனியா பொன்ற இடங்களில் வீதியோரத்தில் இரந்து பொராடி வருகின்றனர்.
இவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. இவர்கள்; புலிக் கொடி ஏந்தியும் போராடவில்லை. ஆனாலும் அரசு இவர்களை கண்டுகொள்ளவேயில்லை.
325ம் நாள் இவர்கள் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் உருவப்படங்களுக்கு செருப்பால் அடித்து தமது எதிர்ப்பைக் காட்டியிருந்தார்கள்.
ஆனாலும் சம்பந்தர் சுமந்திரன் இருவரும் இவர்களை கண்டு கொள்ளவில்லை.
இன்று 365ம் நாள் வேறு வழியின்றி சம்பந்தர் சுமந்திரன் இருவரின் உருவப் பொம்மைகளை கொளுத்தி அவர்களுக்கு இறுதிக் கிரியைகளும் செய்துள்ளனர்.
நான் அறிந்தவரையில் உயிரோடு இருக்கும் ஒருவருக்கு இறந்துவிட்டதாக மக்கள் அதுவும் வயதான பெண்கள் இறுதிக்கிரியை செய்த பெருமை சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் மட்டுமே உண்டு.
இந்த சம்பவம் புலத்தில் நடக்கவில்லை. தாயகத்தில் நடந்துள்ளது.
இதைச் செய்தவர்கள் சிங்களவர்கள் அல்ல. வாக்களித்த தமிழ் மக்களே.
அதுவும் அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள் அல்ல. வயதான பெண்கள்.
எனவே இப்ப சுமந்திரன் என்ன சொல்லப்போகிறார்?
அல்லது சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்குவோர் என்ன சொல்லப் போகிறார்கள்?
குறிப்பு- தயவு செய்து இப் பெண்கள் சீனாவின் கைக்கூலிகள் என்றுமட்டும் சொல்ல வேண்டாம் என் கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment