Wednesday, February 28, 2018

மன்னாரில் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்படுகின்றன

மன்னாரில் இந்து விக்கிரகங்கள் உடைக்கப்படுகின்றன
யாழில் இந்திய தூதர் சிவராத்திரி விழா கொண்டாடுகிறார்.
எதாவது ஒரு விழா நடத்தி தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றிவரும் யாழ் இந்திய துணை தூதர் இறுதியாக சிவராத்திரி விழா கொண்டாடியுள்ளார்.
வழக்கம்போல் இந்தியாவில் இருந்து பேச்சாளர்களை அழைத்து வந்து பட்டிமன்றமும் நடத்தியுள்ளார்.
எங்கேயாவது வடையும் ரீயும் கொடுத்தால் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு ஓடும் எமது தமிழ்தலைவர்களும் வழக்கம்போல் விசுவாசத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.
சலமன் பாப்பையா தலைமையில் “சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை புரிவது அறிவியலா? ஆன்மீகமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றத்தை இந்தியதூதர் நடத்தியுள்ளார்.
உண்மையில் இந்த பட்டிமன்றம் “ஒருபுறம் இந்துமத சாமி சிலைகள் உடைக்கப்படும்போது மறுபுறத்தில் அதைக் கண்டுக்காது விழா நடத்துவது ஆன்மீகமா? அல்லது அரசியலா?” என்ற தலைப்பில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
மன்னாரில் தொடர்ந்து இந்துமத கோயில்கள் தாக்கப்படுகின்றன. பல சாமி சிலைகள் உடைக்கப்படுகின்றன.
கிழக்குமாகாணத்தில் இந்துமத கோயில்கள் இருந்த இடத்தில் பௌத்த விகாரைகள் முளைக்கின்றன.
கிழக்குமாகாண ஆளுநரின் மனைவி நெரிடையாக சென்று இந்து தமிழர்களை மிரட்டியுள்ளார்.
அதைவிட வடக்கு கிழக்கில் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
இவ்வாறு இந்துமதமும் அதன் அடையாளங்களும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவரும் நிலையில் அதுகுறித்து எந்தவித எதிர்ப்பையோ அல்லது ஆட்சேபத்தையோ இந்த இந்திய தூதர் இதவரை தெரிவிக்கவில்லை.
இந்துமதம் குறித்து அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளும் இந்திய அரசும் அதன் தூதரும் இலங்கையில் திட்டமிட்டு இந்துமதம் அழிக்கப்படுவது குறித்து இதுவரை எந்த எதிர்ப்பும் காட்டவில்லை.
மாறாக இந்து மதத்தை அழிக்கும் இலங்கை அரசுக்கு ஒருபுறம் ஆதரவளித்துக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு சிவராத்திரி விழா கொண்டாடுகிறது.
இந்திய தூதரின் இந்த ஏமாற்றுத்தனத்திற்கு தமிழ் மக்கள் பலியாகக்கூடாது.

No comments:

Post a Comment