•இலங்கை மீதான இந்திய அக்கறை என்பது
பொருளாதார நலன் சார்ந்ததா? அல்லது
ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்ததா?
பொருளாதார நலன் சார்ந்ததா? அல்லது
ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்ததா?
யாழ் இந்திய தூதர் நடராஜன் இடமாற்றம் பெற்று செல்வதை முன்னிட்டு அவருக்கு பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதில் கலந்துகொண்ட வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் “ இந்தியா இதுவரை பொருளாதார நலன்களுக்கான அக்கறையே காட்டி வருகிறது. மாறாக இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்” என பேசியுள்ளார்.
இந்திய தூதரின் விருந்தில் கலந்துகொண்டு இந்திய தூதர் முன்னிலையிலேயே இந்தியாவின் உண்மை முகத்தை சுட்டிக் காட்டிய முதல்வரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மற்ற தலைவர்கள்போல் வடையம் ரீயும் குடித்துவிட்டு வராமல் தூதரின் முகத்திற்கு நேரே இதுவரை இந்தியா தீர்விற்கு உதவவில்லை என்பதை கூறியிருக்கிறார்.
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவி வருகிறது என்றே இத்தனை நாளும் சம்பந்தர் , மாவை சேனாதிராசா போன்ற தலைவர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் அது பொய் என்றும் இந்தியா இனியாவது ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் கேட்டிருக்கிறார்.
இந்தியாவின் அக்கறை என்பது இலங்கை மீதான ஆக்கிரமிப்பே என்று நாங்கள் கூறியபோது எம்மை சீனாவின் கைக்கூலிகள் என்றார்கள்.
இப்போது வடக்குமாகாண முதல்வரும் இதே உண்மையை கூறியிருப்பதால் இனி என்ன சொல்லி நிராகரிக்கப் போகிறார்கள்?
இத்தனை அழிவிற்கு பின்னரும் இத்தனை அழிவிற்கு காரணமாக இருந்த இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது?
இத்தனைக்கு பின்னரும் “இந்து தமிழீழம்” கோரினால் இந்தியா உதவும் என்று இந்தியாவில் இருக்கும் காசி ஆனந்தன் அய்யா கூறுகிறார்.
என்னே அவலம் இது?
No comments:
Post a Comment