•சந்திர செல்வா!
எம்மை மன்னித்துவிடு
தேர்தலில் நாம் பிசியாக இருக்கிறோம்
மலர் வளையம் வைக்க வரவில்லை என்று வருத்தப்படாதே
மறக்காமல் உன் போட்டோவை தந்துவிட்டு செல்
அடுத்த தேர்தலுக்கு பயன்படுத்திக்கொள்கிறோம்

நீ மாவை சேனாதிராசாவின் மகனாக பிறந்திருந்தால்
இந்தியாவில் படித்துவிட்டு இப்ப தேர்தலில் போட்டியிட்டிருக்கலாம்.

நீ சம்பந்தர் அய்யாவின் மகனாக இருந்திருந்தால்
இந்தியாவில் வாழ்ந்துவிட்டு இப்ப கொழும்பு வந்து சொகுசு மாளிகையில் வாழலாம்.

நீ சரவணன் எம்.பி யின் பிள்ளையாக இருந்திருந்தால்
ஜனாதிபதியை வரவழைத்து பிறந்தநாள் கொண்டாடியிருப்பார்.

நீ சுமந்திரன் வீட்டில் பிறந்திருந்தால்
பிரதமர் ரணில் வந்து உன் வீட்டில் நுங்கு குடித்திருப்பார்

நீ ஒரு எம்.பியாகி இருந்தால்
சிறீதரன் எம்.பி போல் யாழ்ப்பாணத்தில் வீடு வாங்கி
உன் பிள்ளைகளையும் படிப்பித்திருப்பாய்

நீ ஒரு மாகாணசபை உறுப்பினராகியிருந்தால்
சத்தியலிங்கம் போல் உன் குடும்பத்தவர்களை அனைவரையும் வேலையில் அமர்த்தி பணம் சம்பாதித்திருக்கலாம்.

நீ ஒரு பிரதேசசபை உறுப்பினராகியிருந்தால்கூட
உன் குடும்பம் ஒரு நேர உணவையாவது நிம்மதியாக உண்டிருக்கும்.

பாவம் நீ!
தமிழ் மக்களுக்காக போராட சென்றாய்
அதனால் கால்களை இழந்தாய்
கைகளையும் இழந்தாய்.
சிகிச்சை செய்ய வசதியும் இன்றி மரணித்தும் விட்டாய்

மறக்காமல் உன் போட்டோ ஒன்றை தந்துவிட்டு செல்
அடுத்த தேர்தலில் பயன்படுத்திக்கொள்கிறோம்.

No comments:
Post a Comment