ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் added 4 new photos.
லண்டனில் இருக்கும் கண்ணன் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கண்ணன் அவர்கள் ஒரு சிறந்த உணர்வாளர். அவருடைய உணர்வுகள் பாராட்டுக்குரியவை.
தோழர் தமிழரசன் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படையை மீண்டும் கட்டியெழுப்பியபோது நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க முக்கியமான உதவிகளை வழங்கியவர்.
எனது நூல் குறித்து கண்ணன் அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்களை 1984ம் ஆண்டு முதல் எனக்கு தெரியும். அவரை நான் பாலாண்ணை என்றே அழைப்பதுண்டு.
அவரும் நானும் பல விடயங்களை பேசியிருக்கிறோம் சேர்ந்து செயற்பட்டிருக்கிறோம்.
அவருடைய நூல்கள் வெறுமனே படித்துவிட்டு போவதற்குரியன அல்ல. மாறாக படிப்பவர்களை செயற்பட வைப்பன என்றே சொல்லவேண்டும்.
அவரது முதல் நூலான “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” நூல் தமிழகத்தில் ஈழத்தமிழரை அடைத்து வைத்திருக்கும் வதைமுகாமை உலகிற்கு அம்பலப்படுத்தியது.
அதுமட்டுமன்றி அவ் வதைமுகாமை மூடி அதில் உள்ள அப்பாவி அகதிகளை விடுதலை செய்யுமாறு பலரை குரல் கொடுக்க வைத்தது. அதனால் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
அடுத்து அவர் எழுதியுள்ள “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்களை ஈழத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும்.
இவர்கள் எல்லோரும் தமிழக விடுதலைக்காக போராடியிருந்தாலும் ஈழத் தமிழருக்காகவும் உறுதியாக குரல் கொடுத்தவர்கள்.
அந்தளவில் அவர்களுடைய இழப்பு என்பது தமிழக தமிழர்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
பாலாண்ணை இந் நூலில் எழுதியுள்ள பல விடயங்கள் ஏற்கனவே நான் அறிந்த விடயங்கள்தான். அவர் பல விடயங்களை இன்னும் எழுதவில்லை. அடுத்துவரும் நூல்களில் அவற்றை நிச்சயம் எழுதுவார் என நம்புகிறேன்.
மக்களுக்கு பயன்தரும் நூல்களை அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment