•இந்தியகொடியை இந்தியர்களே எரிப்பது ஏன்?
கடந்தவருடம் தமிழக இளைஞன் ஒருவன் இந்திய கொடியை எரித்தான். அவனை கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமன்றி அவன் கையையும் அடித்து உடைத்தது தமிழக பொலிஸ்.
ஆனால் தற்போது காஸ்மிரில், நாகலாந்தில் என இந்தியாவின் பல மாநிலங்களில் இந்திய கொடிகள் எரிக்கப்படுகின்றன. எதுவும் செய்யமுடியாது இந்திய அரசு திணறுகிறது.
இந்திய கொடிகளை எரிப்பவர்கள் பாகிஸ்தானியரோ அல்லது அந்நிய நாட்டவர்களோ அல்லர்.
இந்தியரே இந்தியாவில் இந்திய கொடிகளை எரித்து தமது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.
தமது பெண்களை இந்திய ராணுவம் பாலியல் வல்லறவு செய்து கொலை செய்வதாக நாகலாந்தில் இந்திய கொடியை எரித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
காஸ்மீரில் எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் இந்திய பொலிசாரால் பாலியல் வல்லறவு செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
அந்த சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருப்பது மட்டுமன்றி விரல் நகங்கள் திருகப்பட்டும், மின்சாரம் பாய்ச்சியும் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரம்கொண்ட காஸ்மீர்மக்கள் இந்திய ராணுவத்தின்மீது கல்லெறிந்து தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இந்திய அரசு வழக்கம்போல் இதனை பாகிஸ்தான் சதி என்று கூறி மறைக்க முயல்கிறது.
இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருப்பதால் பல மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதனால் அவற்றை அடக்குவதற்காக இந்திய ராணுவம் சட்டவிரோதமான அடக்குமுறைகளை கையாள்கின்றது. அப்பாவி மக்களை கொன்று வருகிறது.
No comments:
Post a Comment