பிரதமர் ரணில்- மிஸ்டர் சம்பந்தன்! என்னாலே நம்ப முடியவில்லை. என்ன தைரியத்தில் மகிந்தவை கைகாட்டி பேசினீர்கள்?
சம்பந்தர் அய்யா- ஆமாம் சேர். எல்லாம் உங்களுக்காகத்தான். உங்கள் பதவியைக் காப்பாற்றவே அப்படி பேசினேன்.
பிரதமர் ரணில்- மிஸ்டர் சம்பந்தன்! சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தமிழ் தலைவர்கள் எப்போதும் ஜ.தே.க மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்று தெரியும். ஆனாலும் மகிந்தவுக்கு எதிராக இப்படி கோபம் காட்டுவீர்கள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.
சம்பந்தர் அய்யா- ஜதேக மீது நன்றி காட்டுவதில் நாங்கள் நாயைவிட விசுவாசம் மிக்கவர்கள். இது வர்க்க பாசம் என்று இந்த கம்யுனிஸ்டுகள் கூறுவார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை சேர்.
பிரதமர் ரணில்- உண்மைதான் மிஸ்டர் சம்பந்தன். இருந்தாலும் நாங்கள்கூட மகிந்தவை கைநீட்டி மிரட்டி பேசியதில்லையே.
சம்பந்தர் அய்யா- எனக்கு பதவி தந்து அழகு பார்த்தவர் நீங்கள் சேர். உங்களுக்கு ஆபத்து என்றால் நான் எப்படி மௌனமாய் இருக்க முடியும் சேர்?
பிரதமர் ரணில்- எனது பதவிக்கு வந்த ஆபத்தை நீங்கள்தான் போக்கியுள்ளீர்கள் மிஸ்டர் சம்பந்தன். நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?
சம்பந்தர் அய்யா- நீங்கள் இப்படி கேட்டது பிறவிப் பயனை அடைந்தமாதிரி மகிழ்ச்சியாக இருக்கிறது சேர்.
பிரதமர் ரணில்- என்ன மிஸ்டர் சம்பந்தன், சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டுமா? அல்லது காணாமல்போனவர்களை கண்டு பிடித்து தரனுமா? அல்லது இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்ய வேண்டுமா?
சம்பந்தர் அய்யா- சேர் அதெல்லாம் வேண்டாம். அதையெல்லாம் நானே மறந்துவிட்டேன். அப்புறம் நீங்கள் ஏன் அதை நினைவில் வைத்திருக்கிறியள்?
பிரதமர் ரணில்- அப்ப மிஸ்டர் சம்பந்தன், தீர்வு திட்டம் உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
சம்பந்தர் அய்யா- அட நீங்க வேற சேர். அந்த கருமத்தை அடுத்த பொங்கலுக்கு பார்த்துக்கொள்ளலாம் என அறிக்கைவிட்டால் போதும். முட்டாள் தமிழன் நம்பி விடுவான்.
பிரதமர் ரணில்- அப்ப என்னதான் உங்களுக்கு வேணும் எண்டு சொல்லுங்கோ மிஸ்டர் சம்பந்தன்.
சம்பந்தர் அய்யா- நான் உங்கள் பதவியைக் காப்பாற்றிவிட்டேன். அதுபோல் நீங்கள்தான் என் பதவியைக் காப்பாற்றி தர வேண்டும் சேர்.
பிரதமர் ரணில்- கண்டிப்பாக செய்வேன் மிஸ்டர் சம்பந்தன். கவலை வேண்டாம். எனக்காக குரைக்கும் விசுவாசமான நாய்களுக்கு பிஸ்கட் துண்டை போடுவதற்கு நான் ஒருபோதும் மறப்பதில்லை.
சம்பந்தர் அய்யா- அதில்லை சேர். பதவி இல்லாமல் நான் இருந்துவிடுவேன். ஆனால் சொகுசு பங்களா, சொகுசு வாகனம் , பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் என் பிள்ளைகளால் இருக்க முடியாதாம். அதுதான் கேட்கிறேன்.
குறிப்பு- யாவும் கற்பனை அல்ல.
No comments:
Post a Comment