அடுத்து கொழும்பு சைவக்கடை மசாலா வடையில்
மலட்டு மருந்து கலந்திருப்பதாக வதந்தி பரப்பப்படுமா?
மலட்டு மருந்து கலந்திருப்பதாக வதந்தி பரப்பப்படுமா?
தமது வேலைவாய்ப்புகள் பறிபோய்விடும் என்பதால் இலங்கை மக்கள் “எட்கா” ஒப்பந்தத்திற்கு கடும் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது எட்கா ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று கூறிய ரணில் தற்போது அதனை செய்ய முயற்சி செய்து வருகிறார்.
ஆனால் எட்கா ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே இந்திய நிறுவனங்கள் இலங்கைக்கு வரத் தொடங்கிவிட்டன.
மருத்துவமனைகளின் துணிகளை சலவை செய்யும் பணி இதுவரை இலங்கையரே செய்து வந்தனர். தற்போது இப் பணி இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதைவிட, இந்திய மருத்துவர்கள் சுற்றுலா விசாவில் வந்து இலங்கை மருத்துவமனைகளில் பணியாற்றத் தொடங்கிவிட்டார்கள்.
வடக்கு கிழக்கில் தமிழ் பட்டதாரிகள் தமக்கு வேலை வழங்கும்படி போராடி வருகிறார்கள். ஆனால் இலங்கை அரசோ இந்தியர்களுக்கு வேலைகளை வழங்குகிறது.
தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.
பாதிக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக தமக்கு எதிராக போராடிவிடக்கூடாது என்பதால் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வேலையை அரசியல்வாதிகள் மேற்கொள்கின்றனர்.
அம்பாறையில் முஸ்லிம் கடையில் மருந்து கலந்துவிட்டதாக சிங்கள மக்களை தூண்டி கலவரம் மேற்கொண்டவர் ஆளும் ஜதேக வைச் சேர்ந்த அமைச்சரே.
அNதுபோல் முஸ்லிம் மக்களை தூண்டி ஹாத்தால் செய்ய வைத்தவர்கள் இலங்கை அரசுக்கு அதரவு தெரிவித்து அமைச்சர்களாக இருக்கும் முஸ்லிம் காங்கிரசும் ரிசாத்தும் ஆகும்.
இவர்கள் இனி அடுத்து கொழும்பு சைவக்கடை மசால்வடையில் மருந்து கலக்கப்பட்டது என இன்னொரு வாந்தியை பரப்புவார்கள்.
ஏனெனில் இவர்களைப் பொறுத்தவரையில் எப்படியாவது மக்களை பிரித்து வைத்திருக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.
No comments:
Post a Comment