செய்தி- இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரி பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார்.
குறிப்பு- மகிந்த ராஜபக்சா சென்றார். ரணில் சென்றார். இப்ப மைத்திரி சென்றுள்ளார். இவர்கள் ஏன் செல்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? என்ற உண்மை விபரம் ஒருபோதும் வெளிவருவதில்லை. எனவே இவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்ற ஒரு கற்பனை உரையாடல் இது.
காட்சி -1
இடம்- இந்திய பிரதமரின் இல்லம்.
இடம்- இந்திய பிரதமரின் இல்லம்.
பிரதமர் மோடி- நமஸ்தே! மிஸ்டர் மைத்திரி . என்ன கையெல்லாம் ரத்தக்கறையாக இருக்கிறது?
ஜனாதிபதி மைத்திரி- நமஸ்தே சேர். எல்லாம் நீங்கள் காட்டிய பாதையில் முஸ்லிம் மக்களை கவனித்ததில் கொஞ்சம் ரத்தம் பட்டுவிட்டது.
பிரதமர் மோடி – சரி சரி. நல்ல விடயம். முஸ்லிம்கள் ரொம்பவும் சத்தம் போட்டால் அவர்களை சவூதி ஆரேபியாவுக்கு சென்றுவிடும்படி கூறுங்கள்.
ஜனாதிபதி மைத்திரி- சொல்லலாம் சேர். ஆனால் அப்புறம் சவூதி ஆரேபியாக்காரன் பெற்றோல் தரமுடியாது என்று கூறினால் என்ன செய்வது?
பிரதமர் மோடி – ஓ! அப்படியா? அப்ப ஜ.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்று சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள்.
ஜனாதிபதி மைத்திரி- அடைக்கலாம் சேர். ஆனால் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சி செய்வது கஸ்டம்.
பிரதமர் மோடி- அப்படியென்றால் மாட்டை வெட்டி இறைச்சி சாப்பிட்டது என்று சொல்லி யாராவது ஒரு முஸ்லிம் கிழவரை அடித்துக் கொல்லுங்கள்.
ஜனாதிபதி- அது உங்கள் ஸ்டைல் சேர். ஆனால் எங்கள் ஸ்டைல் வேறு. கொத்து ரொட்டியில் மலட்டு மருந்து கலந்;தாக சொல்லி 4 பள்ளிவாசல், 35 வீடு, 37 கடைகள், 40 வாகனங்களை கொளுத்தியுள்ளோம்.
பிரதமர் மோடி- பலே. இதுகூட நல்லாய் இருக்குதே. நாங்களும் இதை பின்பற்றலாம்போல இருக்கு.
பிரதமர் மோடி – நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. ஆனால் இலங்கையில் மூவினங்களும் ஜக்கியமாக இருக்கக்கூடாது. அவர்கள் ஒன்று சேர்ந்தால் சம்பூரில் எங்களை விரட்டியதுபோல் எல்லா இடங்களிலும் இருந்து விரட்டிவிடுவார்கள்
.
ஜனாதிபதி மைத்திரி- ஓமோம் ஓமோம் நல்லாய் தெரியும் சேர். மூன்று இனங்களும் ஒன்று சேர்ந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்கூட ஆபத்துதான்.
.
ஜனாதிபதி மைத்திரி- ஓமோம் ஓமோம் நல்லாய் தெரியும் சேர். மூன்று இனங்களும் ஒன்று சேர்ந்தால் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்கூட ஆபத்துதான்.
பிரதமர் மோடி- இப்ப உங்களை எதற்கு கூப்பிட்டனாங்கள் என்று தெரியுமா? இந்த “எட்கா” ஒப்பந்தத்தை எப்போது நிறைவேற்றுவது?
ஜனாதிபதி மைத்திரி- இந்த ஒப்பந்தத்தை இப்ப நிறைவேற்றுவது கொஞ்சம் கஸ்டமாய் இருக்கிறது. ஆனால் ஒப்பந்தம் இல்லாமலே அதில் உள்ள சலுகைகளை நீங்கள் இப்பவே அனுபவிக்க நாங்கள் ஏற்பாடு செய்து தருகிறோம்.
பிரதமர் மோடி – சரி. நல்லது. நீங்கள் மறுபடியும் ஜனாதிபதியாக விரும்புவதாக தகவல் வருகிறது. நாங்கள் நிச்சயம் உங்களுக்கு உதவுவோம்.
ஜனாதிபதி மைத்திரி- இந்த மகிந்தவையும் ரணிலையும் என்னால் சமாளிக்க முடியும். ஆனால் சம்பந்தர்தான் ஏதோ மொட்டு தமிழ்ஈழம் மலரும் என்றெல்லாம்; இப்ப பேசுகிறார். அவரை நீங்கள்தான் சமாளிக்க வேண்டும்.
பிரதமர் மோடி- ஓ! அவரா? அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கவலைப்படாமல் சென்று வாருங்கள்.
காட்சி -2
இடம்- சம்பந்தர் அய்யாவின் சொகுசு பங்களா
இடம்- சம்பந்தர் அய்யாவின் சொகுசு பங்களா
சுமந்திரன்- என்ன நடந்தது? ஏன் அய்யாவுக்கு உடம்பெல்லாம் இப்படி வேர்க்குது?
சம்பந்தர் அய்யாவின் மகன்- இந்திய தூதர் ரெலிபோனில் பேசினார். அவர் என்ன கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அப்பாவுக்கு பிறசர் கூடிவிட்டது.
சுமந்திரன்- சரி சரி வழக்கம்போல் ஒரு அறிக்கைவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
அதன்பின்னர் சம்பந்தர் அய்யாவின் வீட்டில் இருந்துகொண்டே வீரகேசரி ஆசிரியருடன் தொலைபேசியில் சுமந்திரன் பேசினார்.
சுமந்திரன்- ஹலோ எடிட்டர்! சம்பந்தர் அய்யாவின் அறிக்கை ஒன்று தாரன். நாளைக்கு தலைப்பு செய்தியாக வரவேண்டும்.
வீரகேசரி ஆசிரியர்- சரி சொல்லுங்கள்.
சுமந்திரன்- சிறுபான்மை இனங்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரியிடம் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி ஆசிரியர்- இந்திய பிரதமர் அப்படி கூறியதாக நான் அறியவில்லை. இருந்தாலும் வழக்கம்போல் நீங்கள் கூறுவதை செய்தியாக போடுகிறோம்.
சுமந்திரன்- மைத்திரியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது மோடி உணர்ச்;சிவசப்பட்டு தண்ணீர் கிளாசை உடைத்ததாகவும் இனி தமிழ், முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டால் இந்தியா பொறுமையாக பார்த்துக்கொண்டிருக்காது என்று மிரட்டியதாகவும் தகவல் வந்துள்ளது.
வீரகேசரி ஆசிரியர்- என்னது ? இது உண்மையா?
சுமந்திரன்- ஆப்த ரெக்காடாக இதை கூறுகிறேன். இதை நீங்கள் கிசு கிசு செய்தியாக கசிய விடுங்கள்.
இந்த உரையாடலைப் படித்தவர்களிடம் இரண்டு கேள்விகள்
(1)சம்பந்தர் அய்யாவுக்கு வேர்த்துக் கொட்டுமளவுக்கு இந்திய தூதர் தொலை பேசியில் என்ன கூறியிருப்பார்?
(2)அடுத்த வார வீரகேசரியில் நம்ம அரசியல் ஆய்வாளர்கள் இது பற்றி என்ன எழுதியிருப்பார்கள்?
No comments:
Post a Comment