Monday, March 19, 2018

நமது தலைவர்கள் பொறுப்பில்லாமல் தூங்குவதாக நினைக்க வேண்டாம்.

நமது தலைவர்கள் பொறுப்பில்லாமல் தூங்குவதாக நினைக்க வேண்டாம்.
இப்படி நித்திரை கொள்வதற்கா இவர்களை தெரிவு செய்தோம் என்றும் அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம்.
மக்கள் பிரச்சனை பற்றி பேசாமல் இப்படி தூங்குவதற்கு எதற்கு இவர்களுக்கு தண்டமாக சம்பளம் வழங்க வேண்டும் என்றும் ஆத்திரப்பட வேண்டாம்.
இவர்கள் சிறையில் இருக்கும் இளைஞரை விடுதலை செய்து பிள்ளைகளுடன் சேர்ந்துவாழ வழி செய்வது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவோம்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.
குறிப்பு- “நாசமாய் போகட்டும் இவங்கள்” என்று நீங்கள் மனதில் திட்டுவது கேட்கிறது.

No comments:

Post a Comment