மோடி வந்தால் ஈழத் தமிழருக்கு உதவுவார் என்றார்களே.
அவர் ஈழத் தமிழருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை இலங்கை அரசுக்கு அல்லவா தொடர்ந்து உதவுகிறார்.
காங்கிரஸ் அரசானாலும் சரி பாஜக அரசானாலும் சரி எல்லா இந்திய அரசும் தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்குத்தானே உதவுகிறார்கள்.
போர் முடிந்து 10 வருடமாகிவிட்டது. ஆனால் இந்திய அரசு இப்பவும் இலங்கைக்கு போர்க் கப்பல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசு கடந்த வருடம் ஒரு போர்க் கப்பலை அன்பளிப்பாக இலங்கை அரசுக்கு வழங்கியது.
இந்திய அரசு கடந்த வாரம் இரண்டாவது போர்க்கப்பலை இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
600 தமிழக மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படைக்கு இரண்டு போர்க்கப்பல்களை இந்திய அரசு வழங்கியுள்ளது.
இதன் அர்த்தம் என்ன? தனது தமிழக மீனவனைக் கொன்றமைக்கு பரிசாக கப்பல்களை வழங்குகிறதா? அல்லது,
இன்னும் தமிழக மீனவனைக் கொன்று குவிக்கும்படி போர்க்கப்பல்களை வழங்குகிறதா?
தமிழக மக்களின் வரிப்பணத்தில் கப்பல்களைக்கட்டி தமிழக மக்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு அன்பளிப்பாக வழங்கும் இந்திய அரசை என்னவென்று அழைப்பது?
தமிழக மக்களுக்கு புயல் நிவாரண நிதி வழங்க மறுக்கும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு வாரி வழங்கிறது.
இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க முதுகெலும்புள்ள ஒரு அரசியல்வாதிகூட தமிழகத்தில் இல்லையா?
அம்பாந்தோட்டையில் சீனா வந்துவிட்டது. எனவே இனி இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று ஆரசியல் ஆய்வு செய்தவர்கள் எல்லாம் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
குறிப்பாக இந்துத் தமிழீழம் கேட்டால் மோடி உதவுவார் என்று கூறும் காசி ஆனந்தன் அய்யா என்ன கூறப் போகிறார்?
இந்திய அரசு ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல தமிழக தமிழருக்கும்கூட உதவப் போவதில்லை என்பதை இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment