•பேராசிரியர்- ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு!
தலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.
1942ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஆக்ஸ்போர்டில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார். கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவர்
இவர். இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள்.
ஒருமுறை அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார்.
அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர். மண்டபத்தில் இடம் போதாமல் வெளியில் நின்று கொண்டும் அவரது பேச்சை செவிமடுத்தனர்.
உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே.
ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார்.
அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது.
உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் ஹவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?”
பக்தர்களே உங்கள் பதில் என்ன?
இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்வரை அறிஞர் ஸ்டீபன் ஹவாக்கிங் புகழ் இந்த உலகில் நிலைத்து நிற்கும்.
No comments:
Post a Comment