தோற்றது இவர் அல்ல
தோல்வியும் வெறுமனே இவருக்கு மட்டுமானது அல்ல
தேர்தல் பாதை மூலம் புரட்சியைக் கொண்டுவர முடியும்
என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கான தோல்வி இது!
நேற்று மேற்கு வங்கம் பறி போனது.
இன்று திரிபுரா பறிபோயுள்ளது.
நாளை கேரளாவும் பறி போய்விடும்.
பணம் விளையாடியது. தேர்தல் மிசினில் தில்லுமுல்லு
எத்தனை நாளைக்கு இந்த காரணங்களை கூறி
தோல்வியைச் சமாளிக்கப் போகிறீர்கள்?
தேர்தல் பாதையில் தொடர்ந்து பயணித்து
இன்னும் எத்தனை நாளைக்கு புரட்சிக்கு
துரோகம் இழைக்கப் போகிறீர்கள்?
No comments:
Post a Comment