Saturday, August 29, 2020
2020 தேர்தல் தமிழ் மக்கள் கூறுவது என்ன?
•2020 தேர்தல்
தமிழ் மக்கள் கூறுவது என்ன?
2020 தேர்தல் முடிவுகள் தமிழத்;தேசியத்தை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று சிலர் கூற முற்படுகின்றனர். இது தவறு. ஏனெனில்,
முதலாவது,
இந்த தேர்தல் தமிழ்தேசியத்தை முன்வைத்து நடக்கவில்லை. அத்துடன் போட்டியிட்ட யாருமே தமிழ் தேசியத்தை மறுப்பதாகவும் கூறவில்லை. எனவே தமிழ்த் தேசியத்தை தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் எனக் கூறுவது தவறு.
இரண்டாவது,
தமிழ் மக்கள் அபிவிருத்திக்காக வாக்களித்துள்ளார்கள் என்று கூறுவதும் தவறு. மாறாக, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்பதை நிராகரித்துள்ளார்கள் என்பதே உண்மை.
எனவே, தமிழ் மக்களுக்கான தீர்வை அனைவரும் ஒன்றுபட்டு பெற வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
ஆனால் இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய கவனிக்கத்தக்க மாற்றம் என்னவெனில் வழக்கத்திற்கு மாறாக தமிழக அமைப்புகள் சில தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்தமையாகும்.
இது ஆதரவு நிலையில் இருந்து சேர்ந்து பங்களித்தல் என்ற அடுத்த கட்ட நிலைக்கு தமிழ் இனம் நகருகின்றது என்பதைக் காட்டுகிறது.
என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மகிந்த ராஜபக்சா ஆட்சி அமைத்தாலும் அவர் இம்முறை இலங்கை அரசைவிட நான்கு மடங்கு பலமுள்ள ஒன்றிணைந்த தமிழர்களை சந்திக்கப் போகின்றார்.
2020 தேர்தல் தமிழ் இனத்திற்கு இத்தகைய நம்பிக்கையை ஊட்டுவதகாவே இருக்கின்றது.
Image may contain: one or more people and text
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment