Saturday, August 29, 2020
•தமிழா! நீ வஞ்சிகப்படுவதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்?
•தமிழா!
நீ வஞ்சிகப்படுவதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்?
வருடம்தோறும் 85000கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு, அதுபோதாதென்று டோல்கேட்கள்; மூலமும் தமிழர்களிடம் வழிப்பறி செய்கிறது.
கேரளாவில் 1782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 5 டோல்கேட்களே உள்ளன.
மகாராஷ்ராவில் 15437 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 44 டோல்கேட்களே உள்ளன.
5381 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன.
ஆக, கேரளாவுடன் ஒப்பிடும்போது 9 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும்
அல்லது, மகாராட்ராவுடன் ஒப்பிடும்போது 15 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும்
ஆனால் தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கையோ 52. இது வழிப்பறி அன்றி வேறு என்ன?
தமிழகத்தில் 52 டோல்கேட்களை அமைத்து வழிப்பறி செய்வதாக பிரதான எதிர்க்கட்சியான திமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 52 டோல்கேட்களில் 23 டோல்கேட்களை அமைத்தவர் திமுக வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவே.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 35000 கோடி ரூபா. கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 40000 கோடி ரூபா.
ஆனால் தமிழக மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மொத்த கடன் 5லட்சம் கோடி ரூபா.
“ஒரு மனிதன் அடிமையாக பிறந்தது அவன் குற்றமல்ல. ஆனால் தனது விடுதலைக்கு போராட விரும்பாதது மட்டுமன்றி தனது அடிமைத்தனத்தை ஆதரித்து அதை அழகுபட வர்ணிப்பவன் ஒரு கீழ்மகன் ஆவான்” - தோழர் லெனின்.
Image may contain: 5 people, including தமிழ் அறிவன், text that says "33 நினைவு நாள் ஆம் ஆண்டு செப்டம்பர் 01 2020 தமிழ்த்தேசியத் தலைவர் தோழர். தமிழரசன் மற்றும் தர்மலிங்கம், அன்பழகன், செகநாதன், பழனிவேல் வீரவணக்கம் தோழர்களுக்கு தமிழ்த்தேச மக்கள் கட்சி தொடர்புக்கு- 98657 91957, 91505 89041."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment