Saturday, August 29, 2020
இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்
இவர்கள் அனைவரும் ஈழத் தமிழர்கள்
சிலர் மகிந்த ராஜபக்சா தேர்தல் வெற்றியை கிளிநொச்சி சந்தியில் கேக் வெட்டி வெடி கொழுத்தி கொண்டாடுகிறார்கள்.
சிலர் அதே மகிந்த ராஜபக்சாவின் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா நோக்கி செல்கிறார்கள்.
உரிமை என்பது பிச்சை அல்ல இரந்து பெறுவதற்கு. அது போராடிப் பெறுவது என்பதை உணர்ந்தபடியால் இந்த சிலர் கொட்டும் பனியிலும் நீதி கோரி செல்கிறார்கள்.
ஆனால் வன்னியில் கேக் வெட்டி கொண்டாடினவர்கள் மகிந்த ராஜபக்சாவிடம் இரந்து கேட்டால் நிச்சயம் பிச்சை கிடைக்கும் என நம்புகிறார்கள்.
எந்த வன்னியில் ஒரு லட்சத்து இருபதாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அந்த வன்னியில் கொலை செய்த மகிந்தவின் வெற்றியை எப்படி இந்த சில தமிழர்கள் கொண்டாடுகின்றனர் என ஆச்சரியம் வரலாம்.
இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தலைவர்களான சம்பந்தர் சுமந்திரன் போன்றவர்கள் இதுவரை செய்த துரோக அரசியலே இதற்கு காரணம் ஆகும்.
இப்போது பிரச்சனை என்னவென்றால், பிச்சை கிடைக்காது என்பதை 5 வருடத்தில் இந்த வெடி கொளுத்தி கொண்டாடியவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என நம்பலாம்.
ஆனால் 50 வருடம் சென்றாலும் சம்பந்தரும் சுமந்திரனும் நிசச்யம் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.
குறிப்பு - சம்பந்தரும் சுமந்திரனும் மகிந்தவுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்று கூறி மகிந்தவிடம் சொகுசு பங்களாவும் சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் பெறும்போது இந்த கேக் வெட்டி கொண்டாடியவர்களை எப்படி விமர்சிப்பது?
Image may contain: outdoor
Image may contain: 6 people, including Yuvendra Rasiah and Parththipan Balakrishnan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment