Saturday, August 29, 2020
இவர் யார்?
•இவர் யார்?
இவரை ஏன் தமிழர்கள்; நினைவு கூர வேண்டும்?
“பிஎம் கேர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயாவது கொடுத்தீர்களா? தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க எந்த திட்டமும் கொண்டு வரமாட்டீங்க, தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தர மாட்டீங்க” என்று கூறியிருப்பது சீமானோ அல்லது மணியரசனோ அல்ல.
அகில இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான பாலபாரதி அவர்களே இப்படி இப்போது கூறியிருக்கிறார்.
இதையே தமிழ்நாட்டில் 33 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கூறினார். அவர்தான் தோழர் தமிழரசன். அவர் இதனை கூறியபோது அவரை பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள்.
அதுமட்டுமல்ல, “இந்திய அரசை நம்பாதீர்கள். அது ஒருபோதும் உங்களுக்கு உதவாது. மாறாக உங்களை கொன்று அழிக்கும்” என்று தோழர் தமிழரசன் ஈழத் தமிழர்களுக்கு கூறினார்.
அவர் கூறியது உண்மைதான் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
எதிர்வரும் செப் -1 யன்று அவரது 33 வது நினைவு தினமாகும். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
Image may contain: 1 person, text that says "1 செப் தமிழினத்தின் விடுதலைக்கான எழுச்சிக் குறியீடே தோழர் தமிழரசன் தமிழ்நாடு விடுதலைக்காகப் போராடிய மாமறவர்களின் ஈகத்தைப் போற்றுவோம்! தமிழ்த்தேச மக்கள் கட்சி"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment