Saturday, August 29, 2020
இந்திய சுதந்திரம் ?
இந்திய சுதந்திரம் ?
5 அடி கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மாட்டை 10 அடிக் கயிற்றில் கட்டி விடும்போது தான் சுதந்திரம் பெற்று விட்டதாக அந்த மாடு நினைக்கும்.
அதுபோல் தாம் சுதந்திரமாக இருப்பதாக சில மாடுகள் மன்னிக்கவும் சில இந்தியர்கள் நினைக்கிறார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சி;க் காலத்தில் ஆங்கிலேயர் சுரண்டியதைவிட அதிகளவு இன்று சுரண்டப்படுகின்றது. ஆனாலும் தாம் சுதந்திரம் பெற்று விட்டதாக சிலர் நினைக்கிறார்கள்.
2000கோடி ரூபா செலவு செய்து ராக்கட் விடுவதாகவும் விரைவில் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.
ஆனால் அதே இந்தியாவில்தான் இன்றும் மனிதர்களை வைத்து கையால் மலம் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
ராக்கட்டுக்கு 2000கோடி செலவு செய்யும் இந்திய அரசால் மலம் அள்ள ஒரு இயந்திரத்தை பெற பணம் செலவு செய்ய முடியவில்லை.
அதுகூடப் பரவாயில்லை. ஆனால் நாட்டின் பிரதமரோ கையால் மலம் அள்ளுவது புனிதமான தொழில் என்று கூறுகிறார்.
சரி. அது புனிதமான தொழில் என்றால் ஒரேயொரு நாள் அந்த தொழிலை இந்தப் பிரதமர் செய்ய முன்வருவாரா?
காட்டுக்கு சென்று புலி யானைகளுக்கு மத்தியில் நின்று தன்னை தைரியமான பிரதமர் என்று காட்டுகிறார்.
ஆனால் இந்த தைரியமான பிரதமர் பத்திரிகை நிருபர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளிக்க ஏனோ பயப்பிடுகிறார்.
அதுமட்டுமல்ல ஈராக்கில் அமெரிக்கா குவித்த ராணுவத்தை விட அதிக ராணுவத்தை காஸ்மீரில் குவித்து விட்டு காஸ்மீர் மக்கள் சந்தோசமாக இருப்பதாக இந்த பிரதமர் அறிக்கை விடுகிறார்.
இது புரியாமல் சில தமிழர்கள் பிரதமரின் இந்துத்துவாவை நியாப்படுத்த முனைகிறார்கள். ஆனால் நாளை இதே ராணுவம் தமிழகத்திற்கு வரும்போது என்ன செய்யப் போகிறார்கள்?
கடந்த வருடம் தூத்தக்குடியில் ஸ்டெர்லைட் க்கு எதிராக அற வழியில் போராடிய மக்களை சுட்டுக் கொன்றார்கள்.
சுட்டுக் கொன்றதும் அல்லாமல் அவர்களை சமூகவிரோதிகள் என்றும் முத்திரை குத்தியுள்ளார்கள்.
இதுதான் இந்தியாவின் 73 ஆண்டு சுதந்திரத்தின் சாதனையா?
Image may contain: 2 people
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment