Saturday, August 29, 2020
•நானும் மயிலும் பற்றிய ஒரு நினைவு!
•நானும் மயிலும் பற்றிய ஒரு நினைவு!
இந்த படத்தைப் பார்த்ததும் மோடியும் மயிலும் பற்றி எழுதப்பட்ட பதிவு என்று நினைத்து விடாதீர்கள்.
இந்த படத்தை பார்த்ததும் என் மனதில் தோன்றிய ஒரு நினைவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
1980 ம் ஆண்டில் நாம் இயக்கம் ஆரம்பித்தபோது பயிற்சிக்காக ஒரு பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அதன்படி தோழர் மனோ மாஸ்டர் அவர்கள் ஐந்து அந்தர் விதை வெங்காயம் இலவசமாக தந்து உதவினார். (அந்தக் காலத்தில் நிச்சயம் இது எமக்கு பெரிய உதவி)
நெடுங்கேணிக்கு அருகில் மாறாஇலுப்பை என்னும் கிராமத்துக்கு அருகில் தோழர் நெப்போலியன் உதவியுடன் இந்த பண்ணையை அமைத்தோம்.
ஒருநாள் சிறிது மழைத் தூறலுக்கு பின்னர் ஒரு கூட்டம் மயில்கள் எமது பண்ணைக்கு அருகில் புல் வெளியில் வந்து நின்றன.
இதைப் பார்த்த நெப்போலியன் ஒரு சொட்கன் துப்பாக்கியை தந்து அவற்றுக்கு வெடி வைக்கும்படி என்னிடம் கூறினார்.
எனக்கு மகிழ்ச்சி. ஏனெனில் நான் முதன் முதலாக துப்பாக்கியால் சுடப் போகிறேன். சுட்டபின் எனக்கு இன்னும் மகிழ்ச்சி. ஏனெனில் அதில் மயில் இறந்து விட்டது.
உடனே நெப்போலியன் அவற்றை உரித்து கறி சமைத்தார். அந்த கறியும் கோழிக்கறி போல் ருசியாகத்தான் இருந்தது.
ஆனால் இதை அறிந்த நெப்போலியனின் தந்தையார் மயில் இறைச்சி சாப்பிட்டால் கால் எலும்பு உறுதியின்றி வளைந்துவிடும் என்றார்.
அவர் கூறியது உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் அதன் பின்னர் நாம் மயிலைக் கொல்வதையோ அதன் இறைச்சி சாப்பிடுவதையோ நிறுத்திவிட்டோம்.
குறிப்பு - மயில் வீட்டில் வளர்க்கக்கூடாது. மயிலை கொல்லக்கூடாது என்கிறார்கள். அப்படி ஏதாவது சட்டம் இலங்கையில் இருக்கிறதா?
Image may contain: one or more people, people sitting, bird and plant
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment