Saturday, August 29, 2020
இவரும் கொழும்பில் பல காலமாக வாழ்ந்து வருகிறார்.
இவரும் கொழும்பில் பல காலமாக வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் கொழும்பில் வாழ்வதை தான் செய்த பாக்கியம் என்று கூறியதில்லை.
இவரும் சட்டம் படித்தவர். ஆனால் இவர் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறவில்லை.
மாறாக, நடந்தது இனப்படுகொலை என்று வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இப்போதுகூட இவர் பாராளுமன்றம் போகுமுன்னர் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தியிருப்பதை சிலர் கிண்டல் அடிக்கின்றனர்.
இது ஒரு சீப்பான விளம்பரம் என்கின்றனர். இது ஒரு போலி நடிப்பு என்கின்றனர்.
இவர் சிறை வாசலில் அஞ்சலி செய்வது பொருத்தமாக இருக்கும் என நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி கிண்டல் அடிக்கின்றனர்.
சரி. அப்படியே இருக்கட்டும். ஆனால் நடிப்பக்காககூட அல்லது போலியாகக்கூட சுமந்திரன் மரணித்தவர்களை நினைவு கூர்வதில்லையே. அது ஏன்?
இந்த முள்ளிவாய்க்கால் அஞ்சலி மூலம் இரண்டு செய்திகளை விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார்.
முதலாவது, நடந்த இனப்படுகொலையை தான் மறக்கமாட்டேன் என்பதை இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களுக்கு கூறியிருக்கிறார்.
இரண்டாவது, இனப்படுகொலையை மறந்து ஆட்சியாளர்களுடன் ஒட்டி உறவாடும் சம்பந்தர் சுமந்திரன் வகையறாக்களுக்கான எச்சரிக்கிறார்.
நல்லதொரு ஆரம்பம். பாராட்டுவோம்.
Image may contain: 7 people, people standing and outdoor
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment