Monday, January 22, 2024
05.01.2000யன்று கொழும்பு வெள்ளவத்தையில்
05.01.2000யன்று கொழும்பு வெள்ளவத்தையில் இராமகிருஸ்ணா வீதியில் உள்ள லாட்ஜில் நான் தங்கியிருந்தவேளை வீதியில் யாரையோ சுட்டிக் கொன்றுள்ளார்கள் என்று கூறினார்கள்.
ஓடிப்போய் பார்த்தபோது குமார் பொன்னம்பலம் அவர்கள் சுடப்பட்டிருந்தார்.
காருக்குள் டிறைவர் சீட்டில் சிறிது சாய்ந்து உறங்குவதுபோல் இருந்த அவரது உருவம் இன்றும் என் நினைவில் உள்ளது.
நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டதால் ஆத்திரமுற்ற ஜனாதிபதி சந்திரிக்கா உத்தரவில் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
அது எந்தளவுக்கு உண்மை எனறு தெரியாது. ஆனால் இக் கொலையில் மொரட்டுவ தாதா ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.
குமார் பொன்னம்பலம் அவர்களின் கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்று தெரியவில்லை.
குமார் பொன்னம்பலம் அவர்கள் அந்த நேரம் அந்த இடத்திற்கு ஏன் வந்தார் என்ற என் கேள்விக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
தலைநகரில் இருந்துகொண்டு தமிழினத்திற்காக குரல் கொடுத்தவர். ஆழ்ந்த இரங்கல்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment