Tuesday, January 30, 2024
இதற்கு யார் பொறுப்பு?
•இதற்கு யார் பொறுப்பு?
74 வயதுடைய ஒரு அகதி தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சிறப்பு முகாமில் அடைககப்படுகிறார்.
அந்த வயதானவர் செய்த பயங்கரவாதம் என்ன?
வெளிநாடு செல்வதற்காக இந்திய கடவுச்சீட்டை பெற முயன்றார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு;
நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்துவிட்டது. ஆனாலும் தமிழக அரசு அவரை தீவிரவாதியாக சிறப்புமுகாமில் அடைத்தது.
அவர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டிற்கு அதிக பட்சம் 6 மாதம் தண்டனை கிடைக்கும்.
ஆனால் அவர் நான்கு வருடங்களாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் தனக்கு வழங்கப்படக்கூடிய தண்டனை காலத்தைவிட அதிக காலத்தை கழித்துவிட்டபோதும் அவருக்கான நீதி வழங்கப்படவில்லை.
அதாவது அவருக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மாட்டுக்குகூட நீதி கிடைக்கும். ஆனால் ஈழ அகதிக்கு கிடைக்காது.
அடைத்து வைக்கப்படுவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமை.
ஆனால் இதய நோயாளியான இவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை.
தன்னை மருத்துவமனைக்கு அனுப்புமாறு அவர் பல தடவை கேட்டிருக்கிறார். ஆனால் அவர் அனுப்பப்படவில்லை.
இறுதியாக தனது மாத்திரைகள் முடிந்துவிட்டன. அதையாவது வாங்கித்தரும்படி கெஞ்சியிருக்கிறார்.
அப்பவும் அரசு இரங்கவில்லை. அவர் இறந்துவிட்டார்.
நடந்த விடயங்களை குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளுமாறு அங்குள்ள அகதிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளனர்.
இந்த அகதியின் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பு. தமிழக முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு.
இது குறித்து உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரணை செய்ய வேண்டும்.
செய்யுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment