Tuesday, January 30, 2024
இருவரும் தமிழ்நாட்டில்
இருவரும் தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்
ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இன்னொருவர் ஈழத் தமிழ் அகதி சாந்தன். அகதி என்பதால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
உச்சநீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை மறுத்து அவரை தொடர்ந்தும் சிறையில் வைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் சாந்தனை விடுதலை செய்தும்கூட அவர் ஈழத் தமிழர் என்பதால் அவரை சிறப்புமகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.
சிறையில் இருக்கும் ஊழல் அமைச்சருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக குரல் கொடுக்கும் மனிதவுரிமை அமைப்புகள், கட்சிகள், பிரமுகர்கள், பெண்ணிய அமைப்புகள் சாந்தனுக்காக குரல் கொடுக்கவில்லை.
அதைவிட ஆச்சரியம் , சிறப்புமுகாமில் மருத்துவசிகிச்சை மறுக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு அகதி இறந்துள்ளார். அதற்குகூட ஒரு இரங்கல் இவர்களால் தெரிவிக்க முடியவில்லை.
அது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment