Wednesday, January 31, 2024
ஜெயா அம்மையார் ஆட்சியில்
ஜெயா அம்மையார் ஆட்சியில் பூந்தமல்லி சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருந்த தன் கணவரை பார்க்க அனுமதிக்குமாறு கோரி ஒரு தாய் தன் இரண்டு பிள்ளைகளுடன் சிறப்புமுகாம் வாசலில் உண்ணாவிரதம் இருந்தார்.
சிறப்புமுகாமில் உள்ளவர்கள் தம் உறவினர்களை பார்க்க அனுமதிக்க வேண்டும். விரும்பினால் தங்களுடன் தம் குடும்பத்தை வைத்திருக்கவும் அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது.
ஆனால் ஜெயா அம்மையார் அரசு கொஞ்சம்கூட இரக்கமின்றி உண்ணாவிரதம் இருந்த தாயையும் இரு பிள்ளைகளையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
பின்னர் ஜெயா அம்மையார் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தன்னுடன் தன் தோழி சசிகலா தங்க அனுமதிக்க வேண்டும் என மனுக் கொடுத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment