Tuesday, January 30, 2024
ஒரு வார்த்தையின் மதிப்பு என்பது
ஒரு வார்த்தையின் மதிப்பு என்பது அதை சொல்பவரை பொறுத்து உள்ளது.
உதாரணமாக ஒரு புல்லிடம் கேட்டால் சிங்கத்தைவிட மாடும் ஆடும் பொல்லாதவை என்றே அது சொல்லும்.
எனவே நாம் கேட்கும் ஒவ்வொரு சொல்லும் யாரால் யாருக்கு சொல்லப்படுகின்றது என்பதை காண வேண்டும்.
ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு வர்க்கத்தின் குணாம்சம் ஒளிந்திருக்கும் என்று லெனின் கூறினார்
நாம் படிக்கும் வரிகள்
நாம் கேட்கும் பாடல்கள்
நாம் காணும் படங்கள்
இவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்கத்தின் குணாம்சம் என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.
வெடிகுண்டு ஒருமுறைதான் வெடிக்கும். ஆனால் புத்தகம் படிக்கும்போதெல்லாம் வெடிக்கும்
எனவே மக்களுக்காக பயன் உள்ள வார்த்தைகளை எழுதினால் அவை நிச்சயம் விளைவுகளை ஏற்படுத்தும்.
முகநூலில் எழுதுவதால் என்ன பயன் கிடைக்கும் என சிலர் நக்கலாக கேட்கின்றனர்.
ஆனால் முகநூலில் எழுதும் எழுத்துக்கள் மாற்றத்தை எற்படுத்தும் என்பதை அரசுகள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றன.
அதனால்தான் அவ் எழுத்துகளை தடை செய்ய அரசுகள் முற்படுகின்றன.
ஏனெனில் கருத்துகள் மக்களை பற்றிக் கொண்டால் அவை பௌதிக சக்தி பெற்றுவிடும்.
அந்த மக்கள் சக்தியானது அணுகுண்டைவிட வலிமையானது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment